பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பிரிதி எம்பெருமான் 95

ஒரிடத்தில் நின்று இடியோசைகளை எழுப்ப அவற்றை யானைகளின் பிளிறல்கள் என மயங்கி மலைப் பாம்பு கள் மலை பெயர்ந்தாற்போல் பெயர்ந்து காத்துக் கிடக்கின்றன (10).

இத்தகைய சூழ்நிலையில் அமைந்துள்ள திவ்விய தேசத்தில் வாலியை வானுலகிற் கனுப்பியவனும், வானர சேனையின் துணைகொண்டு சேது அமைத்து இலங்கையை நாசம் செய்தவனுமாகிய இராமன் திருக்கோயில் கொண்டுள்ளான் (1, 2). உடுக்கை இடையையும் சுருண்ட கூந்தலையும் பளிச்சென்று இலங்கும் பற்களையும் உடைய பின்னைப் பிராட்டியின் பொருட்டு ஏழு காளைகளையடக்கிய கண்ணன் எழுந்தருளியிருக்கும் இடமும் இதுவேயாகும் (3). ஒப்பற்ற வீரனாகிய இரணியனின் மார்பை பிளந்த நரசிம்மப் பெருமானும் இங்கு எழுந்தருளியுள்ளான் (4). திருவனந்தாழ்வானின் சயனத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமானும் இவனே (6). இவன் திருவடிகளை இமையோர்கள் நான்மூகனை முன்னிட்டு ஆயிரம் பெயர்களால் அருச்சிக் கின்றார்கள் (7, 8). இங்ஙனம் அர்ச்சை நிலையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை ஆழ்வார் வியூக நிலை எம்பெருமானாகவும், அவதார தி ைல எம்பெருமான்களாகவும் கண்டுகளிக்கின்றனர். எந்த நிலைகளில் பாடிப் பரவினாலும் அங்ஙனம் பாடிப் பரவப் பெறுபவன் பரமபத நாதனே என்பது வைணவக் கொள்கையாகும்.

இங்குக் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானின் திருநாமம் பரமபுருடன்; தாயார் பரிமளவல்லி நாச்சி யார். கிழக்கு நோக்கிய நிலையில் எம்பெருமான் புயங்க சயனத்தில் சேவை சாதிக்கின்றார். இவர் சந்நிதியில் ஆழ்வார் திருமொழியை ஒதி உளங்கரை கின்றோம் இந்நிலையில் திவ்விய கவியின் திருப்பாசுர