பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 வடநாட்டுத் திருப்பதிகள்

மும் நினைவிற்கு வருகின்றது. அதனையும் ஒதுகின் றோம். -

வழங்கும் உயிரனைத்தும்

வாரிவாய்ப் பெய்து விழுங்கும் கவந்தன்

விறல்தோள் - கிழங்கைப் பொருப்பிருதிக் குங்கிடந்தால்

போல் துணித்து வீழ்ந்தான் திருப்பிரிதிக் கென்நெஞ்சே

செல்’ (பெய்து - தள்ளி; விறல்-வலிமை; கிழங்கு-மூலபாகம்

வேர்; பொறுப்பு-மலை; துணித்து-வெட்டி) “திருமால் எழுந்தருளியிருக்கும் திருப்பிரிதி என்னும் திருத்தலத்தைப் போய் அடைவாயாயின் உன் எல்லா விரோதிகளும் நீங்கி நற்கதி பெறுவது திண்ணம்’ என்ற கருத்து நம் சிந்தை நிறைந்த நிலையில் நம் வினைகள் யாவும் தீயினால் துரசாகி விட்டன என்ற மன நிறைவு பெற்று நம் இருப்பிடத்திற்கு ஏகுகின்றோம்.