பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9& வடநாட்டுத் திருப்பதிகள்

தாழ்ச்சி எல்லாம் இவனுடைய ஏற்றத்திற்குக் காரண மாக அமைந்தன; இவை இவனுக்கு ஒளியையும் தரு, கின்றன. நீர்மைக்கு எல்லை நிலமான கிருட்டினா வதாரத்தில், பரத்துவத்திற்குச் சமமாகச் சொல்லக். கூடிய நிலைகளையெல்லாம் விட்டொழித்து,

‘மத்துறு கடைவெண்ணெய் களவினில்

உரலிடை யாப்புண்டு எத்திறம், உரலினோடு இணைத்திருந்து

எங்கிய எளிவே”.*

என்று நம்மாழ்வாரும் இந்த எளிமைக் குணத்தில் ஈடு. பட்டுப் பேசுகின்றார். இங்ஙனம் பேசும்போதே இந்த ஆழ்வார் மூவாறு மாசம் மோகித்துக் கிடந்தார் என்று ஆசாரிய ஹிருதயம் குறிப்பிடுகின்றது. கூரத் தாழ்வானும் தனது அதிமானுஸ்தவம்’ என்ற நூலில், இதனை எடுத்துக்காட்டுகின்றார்.

மதுரை (Muttra) இருப்பூர்தி சந்திப்பில் தங்கும். அறையொன்றில் தங்கியிருக்கும் நம்முடைய மனத்தில் மேற்குறிப்பிட்டவாறு சிந்தனையோட்டம் நிழலிடு கின்றது. அதிகாலையில் எழுந்து நீராடி நல்லாடை புனைந்து சிற்றுண்டிக்குப் பிறகு வடமதுர்ைக்குப் புறப்படுகின்றோம் தோங்காவில். இந்த நகரம் இருப் பூர்தி நிலையத்திலிருந்து சுமார் 3 கி. மீ. தொலைவில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஒடும் யமுனை நதிக்கரை யில் உள்ளது. இது கண்ணன் அவதாரம் செய்த திருத் தலம். முத்தி தரும் நகரங்கள் ஏழினுள் இதுவும் ஒன்று. கண்ணுக்கு மதுரமாயிருத்தலாலும், மது என்ற அசுரனை அழித்த இடமாதலாலும் இதற்கு மதுரை எனப் பெயர் வந்தது என்று கூறுவர்.

4. திருவாய்- 1, 3 :1

5: தில்லிக்கு மூன்னதாகவே சுமார் 170 கி. . தெர்லைவிலுள்ளது.

இச் சந்திப்பு.