பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடி மதுரைப் பிறந்த மாயன் 99

யமுனை நதியின் தென்கரையில் திருத்தலப் பயணி கள் வசதியாக நீராடுவதற்கு நல்லபடித்துறையொன்று அமைக்கப் பெற்றுள்ளது. இங்குள்ள பண்டாக்கள் பொய்யும் புனை சுருட்டுமாகக் கண்ணன் பிறப்பைப் பற்றிக் கூறும் செய்திகளை நம்ப வேண்டியதில்லை. கண்ணனைப் பற்றிய பழங்கால இடங்கள் யாவும் இஸ்லாமியர்களின் படையெடுப்பின் பொழுது அழிக்கப் பெற்றன. ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திருக் கோயில்கள் இன்று ஒன்று கூட இல்லை. பிற்காலத்தில் எழுந்த கட்டடங்களும் பாழடைந்து கிடக்கின்றன. கண்ணனுக்குரிய கேசவ தேவர் மந்திர் என்ற திருக் கோயில் இன்று இல்லை. அந்த இடத்தில் ஒரு பெரிய மசூதியைக் காண்கின்றோம்.

இன்று இந்த மசூதியைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் ஒரு பெரிய கட்டடம் பலகோடி ரூபாய் செலவில் எழும்பி யுள்ளது. இங்குக் கண்ணனுக்குத் தனிக்கோயில் மிக அழகான முறையில் பளிங்குக் கற்களால் கட்டப் பெற் றுள்ளது. இக்கோயிலுள்ள கிருஷ்ணனின் சிலை கண்டாரை ஈர்க்கும் பாங்கில் உள்ளது. இச்சிலை வடிவம் தான் ஆண்டாள் குறிப்பிடும் ‘மாயன்; வடமதுரை மைந்தன்’ என்று நினைந்து வழிபடுகின்றோம். இப் பெருமானைத்தான் ஆண்டாள், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய ஆழ்வார் பெருமக்களும் மங்களா சாசனம் செய்ததாகக் கற்பனை செய்து கொள்ளு கின்றோம்.

வடமதுரைப் பிறந்தாற்கு அருள்கொள் ஆளாய் உய்யல் அல்லால்

இல்லை கண்டீர் அரனே.”

[ஆளாய் - அடிமையாய்; அரண் - புகல்)

8. திருப் .5 7. திருவாய், 9. 1 : 3