பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii

சைவ சமயத்தைச் சார்ந்த பேராசிரியர் டாக்டர் ரெட்டியார் பல்லாண்டுகள் நாலாயிரத் திவ்வியப் பிரபந் தத்தை ஆய்ந்து டாக்டர் பட்டம் பெற்றவர். திருவேங்கட வன் பல்கல்ைக் கழகத்தில், ஆழ்வார்கள் பாசுரங்களில் மிகவும் ஈடுபட்டுத் தம் மனத்தைப் பறிகொடுத்தவராத லால் வைணவ தத்துவத்தைப் பேசும்போதும், எம்பெரு மானின் அநந்த கல்யாண குணங்களை எடுத்துரைக்கும் போதும், அவனுடைய வெற்றிச் செயல்களையும் வீரச் செயல்களையும் எடுத்துக் கூறும்போதும், வியக்கத்தக்க ஈடுபாட்டோடும், தோய்ந்த உள்ளத்தோடும், விரிந்த மனநிலையோடும் தம்மையே மறந்த நிலையை எய்தி விடுகின்றார். திருவேங்கடத்தில் தொடங்கும் இவர்தம் பக்திப் பயணம் சிங்கவே.ழ் குன்றம், நைமிசாரண்யம் துவாரகை, அயோத்தி, வடமதுரை, ஆயர்பாடி, பிருந்தாவனம், கோவர்த்தனம், கண்டம் கடிநகர், திருப் பிரிதி, பதரிகாச்சிரமம் ஆகிய திருத்தலங்களைச் சேவித்த வ:ன சாளக்கிராமத்தில் நிறைவு பெறுகின்றது; பாற்கடலையும் பரமபதத்தையும்கூட இப்பயணத்தில் தரிசனம் செய்து வைத்து விடுகின்றார்; நாமும் இவரு டன் பயணத்தை மேற்கொண்டு இத்திருத்தலங்களை யெல்லாம் சேவித்த பேற்றைப் பெற்றுவிட்டதான திவ்விய அநுபவத்தைப் பெறுகின்றோம். -

இத்திருத்தலப் பயண நூலில் திருத்தலங்களின் இயற்கைச் சூழ்நிலைகள், அங்குத் திருக்கோயில் கொண் டிலங்கும் எம்பெருமான்களின் சிறப்புகள் இவற்றையும்; பிருந்தாவனம் கோவர்த்தனம் இவ்விடங்களில் கண்ணன் கன்றுகளை மேய்க்கும்போது ஆற்றிய வீரச் செயல்கள், ஆயர்பாடியில் வளரும்போது ஆற்றிய அருஞ் செயல்கள் ஆகியவற்றையும்; திருப்பாற்கடலிலும் பரமபதத்திலும் எம்பெருமானின் இருப்பையும் கண்டு மகிழ்கின்றோம். இத்தனைக்கும் மேலாகப் பிரபத்தியின் பெருமை, புருஷ காரத்தின் மகிமை, எம்பெருமானின் திருவடிகளின்