பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 வடநாட்டுத் திருப்பதிகள்

மார்கட்குத் தனிக்கோயிலும் இல்லை. முற்பகலில் நான்கு முறையும், பிற்பகலில் நான்கு முறையும் இத்திருக் கோயிலில் வழிபாடுகள் உண்டு. இப்பகுதியில் மதுரை யைச் சுற்றி 168 மைல் சுற்றளவில் அமைக்கப் பெற்ற திருக்கோயில்களில் துவாரகை நாதர் திருக்கோயிலே செல்லச் செழிப்பில் திகழ்கின்றது. திருப்பதியை அடுத்து அதிகச் செல்வம் கொழிப்பது இத்திருக்கோயிலே என்று சொல்லப் பெறுகின்றது.

இங்ஙனம் பல செய்திகளை அறிந்தவண்ணம் கோவர்த்தனம்’ என்னும் இடத்திற்கு ஏகுகின்றோம். கண்ணபிரான் பசுக்களுக்குப் புல்லும் நீரும் நல்கி வளர்த்த தனால் அவனுக்குக் கோவர்த்தனன் என்னும் திருநாமம் உண்டு. இந்தத் திருநாமத்தை இம்மலைக்கு இட்டு வழங் கினன். இதை நினைத்து பெரியாழ்வார் தன்பேர் இட்டுக்கொண்டு தரணிதன்னில் தாமோதரன் தாங்கு தட வரை’ என்று போற்றுகின்றார். இம்மலை வடமதுரை யிலிருந்து சுமார் 20 கி. மீ. தொலைவில் உள்ளது. இந்த மலையும் கண்ணன் மாடுகள் மேய்த்த இடமாகும். இது மிக உயர்ந்த மலையன்று; அழகான ஒரு நீளமான சிறு : குன்று மரங்கள் நிறைந்து அழகாகக் காட்சி தரு ன்றது. இதனை நினைந்துதான் பெரியாழ்வார், ‘குரவிற் கொடிமுல்லைகள் கின்று உறங்கும்

கோவர்த்தனம் (குரவில்-குரவ மரத்தில்; கொடிமுல்லைகள்-முல்லைக்

கொடிகள்) - ஒன்று இம்மலையை வருணித்தனரோ என்று கருத வேண் டியுள்ளது. இந்த மலையின் சுற்றளவு சுமார் 15 கி.மீ.

14. இந்தத் திவ்விய தேசம் திவ்வியகவியின் 108 திகத் தலங்களில் ஒன்றாக அமையவில்லை.

15. பெரியாழ். திரு. 3 . 5 : 9

18. பேசியாழ். திரு. 3 . 5:11.