பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 ll i.- நாட்டு த் திருப்பதிகள்

கென்று சமைத்த சோறு முதலியவற்றை இந்திரனுக்கு இடவொட்டாமல் கோவர்த்தன மலைக்கு இடுவித்து பின்பு தானே ஒரு தேவதை உருவத்துடன் அவற்றை

முழுதும் அமுது செய்துவிட்டான். இந்திரன் பசிக் கோபத்தினால் மேகங்களை ஏவி ஏழுநாள் கல்மாரி, பெய்வித்தான். கண்ணன் கோவர்த்தன மலையைப் பெயர்த்தெடுத்துக் குடையாகத் தூக்கிப் பிடித்துக் கோக்களையும், கோவலரையும் காத்தருளினன். இப்

பேருதவியைப் பெரியாழ்வார் பெரிதாக மதித்து அவ்வரலாற்றை ஒரு திருமொழியில்’ விரிவாக அருளி இனியராகின்றார். மலையடிவாரத்திலிருக்கும் நாம் இத்

திருமொழியில் ஆ ழ ங் கா ல் படுகின்றோம். முதற். பாசுரத்தில் மலை எடுத்த வரலாறு கூறப்பெறுகின்றது,

‘அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும்

தயிர்வாவியும் நெய்யளறும் அடங்கப் பொட்டத் துற்றி மாரிப்பகை புணர்த்த

பொருமா கடல்வண்ணன் பொறுத்தமலை’ (அட்டு-சமைத்து; குவிசோறு-குவிக்கப்பெற்ற சோறு; பருப்பதம்-மலை; தயிர்வாவி-தயிராகிய குளம்; நெய் அளறு-தெய்யாகிற சோறு; பொட்டி துற்றிவிரைவாக அமுது செய்து)

என்ற பாசுரப் பகுதியில் இந்த வரலாறு கூறப்பெற்றுள்ள தைக் காண்க.

இத் திருமொழிப் பாசுரங்களில் மலையின் வருணனை யும், கண்ணன் மலை எடுத்த எளிமையும் கலந்து காணப் பெறுகின்றன. இவற்றில் ஆழ்வாரின் கற்பனை நயத்தைக் காணலாம். மலைக்காடுகளில் திரியும் ஒரு யானை, கரை, போன்று உயர்ந்துள்ள மேட்டு நிலத்தைத் தன் கொம்பு

13. பெரியாழ். திரு. 3, 5 19. . 8, 6 : 1.