பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடமதுரைப் பிறந்த மாயன் 107

‘கற்றன பேசி வசவு உணாதே

காலிகள் உய்ய மழைதடுத்துக் கொற்றக் குடையாக ஏய்தி கின்ற

கோவர்த் தனத்து என்னை உய்த்திடுமின்’ (காலிகள் - பசுக்கள், உய்ய - பிழைக்க) என்று தன்னைக் கோவர்த்தன மலையருகே கொண்டு போய் விடுமாறு வேண்டுகின்றாள்.

நம்மாழ்வாரும் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்த நிகழ்ச்சியை,

‘உண்ண வானவர்கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த

அடிசில் உண்டதும் வண்ண மால்வரையை எடுத்து மழைகாத்ததும்

எண்ணும் தோறும் என்கெஞ்சு எரிவாய்

மெழுகு ஒக்கும்’ என்ற பாசுரத்தில் ஆழங்கால்பட்டு அனல் வாய்ப்பட்ட மெழுகுபோல் உருகுகின்றார். திருவரங்கப் பெருமான் மீது மோகித்த நிலையில் ஆழ்வார் பாசுரம் தாய்ப் பாசுர மாக வடிவெடுக்கையில்,

“கொழுந்து வானவர்கட்கு என்னும், குன்றுஏக்தி

கோ-நிரை காத்தவன் என்னும்’’’ என்று மகள் அநுபவமாக வெளிப்படுவதை எண்ணி நாம் அந்நிலையை எட்ட முயல்கின்றோம்.

இங்ஙனம் ஆழ்வார்கள் பாசுரங்களில் ஈடுபட்டு மெய் மறந்த நிலையில் திவ்விய கவியின் திருப்பாசுரம் நினை விற்கு வருகின்றது.

21. காச். திரு. 12 : 8

22. திருவாய் 5. 10 : 5 28. .. ? . 2 : 8