பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 வடநாட்டுத் திருப்பதிகள்

செல்வம் உயிர்உடம்பு சேர உரித்தாக்கி வல்வினையின் நீங்குமின்

மாந்தர்காள் - தொல்லை வடமதுரை யான்கழலே

வாய்த்த தஞ்சமென்று திடமதுரை செய்தான்

திறந்து’ (தொல்லை - பழமையான கழல் - திருவடிகள்: வாய்த்த பொருந்திய, தஞ்சம் - அடைக்கலம்; திடம் அது உறுதியாக உரை செய்தான்உபதேசித்தான்) . என்பது பாசுரம், “மானிடர்கள், கர்மம், ஞானம், பக்தி, பிரயத்தி முதலிய வழிகளையெல்லாம் கைவிட்டு, தனது திருவடிகளையே தஞ்சமாகப் பற்றும்படி உபதேசித்த கண்ணன் திறத்தில் உமது உடல், பொருள், உயிர், ஆகிய அனைத்தையும் ஒருசேர உரிமையாக்கி அப்பிரான் அருளால் இரு வினைத் தொல்லைகளினின்றும் நீங்கி உய்வு பெறுவீர்களாக’ என்று உலகத்தார்க்கு உபதேசிப் பதை நாமும் கேட்கின்றோம். சேஷபூதன் இழியும் துறை சேவியின் திருவடிகளேயாதலால் கழலே வாய்த்த தஞ்ச மென்று திடமாக உரைத்ததையும் சிந்திக்கின்றோம்.

கோவர்த்தனத்தைச் சேவித்த நாம் நந்த கிராமம், பர்சானா என்ற இடங்களையும் சென்று சேவிக்க எண்ணுகின்றோம்.

கந்த கிராமம்: கண்ணன் புகழால் நந்தன், யசோதை இவர்கள் புகழ் ஓங்கியது. இதனை நிலை நிறுத்தும் வகையில் ஒரு சிற்றுருக்கு நந்தன் பெயரை இட்டு வழங்கியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த

24. நூற். திருப். அந்-104