பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிருந்தாவனத்தில் கண்ணன் 111

பதற்குக் காரணம் என்ன என்று பராசரபட்டரைக் கேட்க, அதற்கு அவர், ‘ஒருவனுக்கு உண்டான துக்கம் சில நாட்கள் கழிந்தால் பொறுக்கலாம்; அணித்தானால் ஆறியிருக்கப் போகாதே அன்றோ? அப்படியே அல்லாத அவதாரங்களைப்போல் அன்றிக்கே, *psfga)Lpfrg) யாலே, ஒரு செவ்வாய்க் கிழமை முற்படப் பெற்றிலோம் பாவியேம்! பல்லிலே பட்டுத் தெறிப்பதே! என்னும் இழவாலே வயிறு எரிதலாலேயாயிருக்கும்’ என்று அருளிச் செய்தார்.’ மேலும் அவர், இராமாவதாரத்தில் தகப்பன் சம்பரனைக் கொன்றவனாய் ஏக வீரனாய் இருப்பான் ஒருவன், பிள்ளைகளோ ஆண் புலிகள். குடிதானே குறும்பரான பகைவர்களை அறுத்திருப்பதொரு குடி, இவையெல்லாம் மிகையாம்படிக் குணத்தாலே நாடுகளை யெல்லாம் (எல்லாரையும்) அடிமையாக்கிக் கொண்டிருப் பவர்கள்; ஆகையால் அத்தலையில் எதிரிகள் என்ற சொல்லும் இல்லை. இத்தலையில் அங்கன் அன்றிக்கே, தமப்பன் ஒரு சாது விருத்தன்; பிறந்தது கம்சனின் சிறைக் கூடத்திலே; வளர்ந்ததும் அவனகத்து அருகே. பிருந்தா வனத்திலே எழும் பூண்டுகளகப்பட அசுரமயமாயிருக்கும். இரட்சகரானவர்கள் (நம்பி மூத்தபிரான்) ஒர் அடி தாழ நிற்கில் பாம்பின் வாயிலே விழும்படியாயிற்று இவன்தன் படிகள் இருப்பன. அப்படியானால் வயிறு எரியாதே செய்வது என் இவர்கள்?’ என்று அருளிச் செய்தார்.”

இங்ஙனம் மனம் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் பிருந்தாவனத்தைச் சென்று சேவிக்க வேண்டும் எனற எண்ணம் கொண்டு புறப்படுகின்றோம். பிருந்தாவனம் என்பதற்கு நெருஞ்சிக் காடு என்பது பொருள். 6TEST! அவதரித்ததும் இவ்விடம் இந்நிலை மாறி வளம் கொழிக்கும் விரஜபூமி (மேய்ச்சல் நிலம்) யாது மாறி விட்டது. வடஇந்தியாவில் சத்திரப் பிரதேசத்திலுள்ள

---

2. திருவாய் 5.10 ஈட்டின் அவதாரிகை.