பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிருந்தாவனத்தில் கண்ணன் 1 3

கண்ணிர் மல்க விழுந்து விழுந்து புரண்ட இடம், குழலூதிக் கோபியரின் உள்ளத்தைக் கவர்ந்த வனம் (பான்சி வனம்), மற்றும் சேவா குஞ்சம், பக்தவிலோசனம் முதலானவைகள் உள்ளன. இவற்றைக் கண்டு களிக் கின்றோம். சில நாட்களில் நள்ளிரவில் இன்றும் கண்ணனின் குழலோசை கேட்பதாக அங்குள்ளோர் கூறுகின்றனர்.

பிருந்தாவனத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதி களிலும் கண்ணனின் பல திருக்கோயில்கள் உள்ளன. பெரும்பாலான திருக்கோயில்கள் வைணவத்தின் ஒரு பிரிவினரான சைத்தன்ய மார்க்கத்தினராலும், மற்றொரு பிரிவினராகிய நிம்பார்க்க மார்க்கத்தினராலும் எழுப்பப் பெற்றவையாகும். பிருந்தாவனத்தில் வங்காளிகள் அதிக மாகக் குடியேறியுள்ளனர். பக்தர்களும் பகவர்களும் ஆசாரியர்களும் இப்பூமியில் ஏதேனும் ஒரு பிறவி எடுக்க அவாக் கொண்டனர். இதயத்தில் ஆன்மா இருப்பது போல் விரஜபூமி'யின் இதயமான பிருந்தாவனத்தில் கண்ணன் என்றும் மகிழ்ந்து இனிது மருவியுள்ளான் என்று கூறுவர் பெரியோர்.

அரங்கமந்திர் (ரீரங்கஜி மந்திர்): இத்திருக்கோயில் யமுனைக் கரையில் நிமிர்ந்து நின்று காட்சி தருகின்றது. இது தமிழகப் பாணியில் அமைந்தது. இங்குப் பழைமை யான பல திருக்கோயில்கள் இருப்பினும் அரங்கமந்திரே சிறந்த ஒரு திவ்விய தேசமாகத் திகழ்கின்றது. ஐந்து சுற்றுகளும் (பிராகாரங்கள்), ஐந்து கோபுரங்களும், ஐந்து மதில்களும் உடைய இத்திருக்கோயிலின் அமைப்பு திருவரங்கம், காஞ் சி புர ம் திருக்கோயிலமைப்பை ஒத்துள்ளது. திருவரங்கமே சிறிய அளவில் தோற்றம் தரும் முறையில் அமைந்துள்ளது என்று சொல்லலாம். திருக்கோயிலின் கடைசி வெளிச்சுற்றினுள் இத்திருக்

33–8