பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிருந்தாவனத்தில் கண்ணன் 115

இலக்குமி நாராயண மத்திரத்தில் இருந்தது. அங்குப் பீடாதிபதியாக இருந்த சீநிவாசாச்சாரியாரை: பணிந்து அங்கேயே தங்கி அவரிடம் இரகசிய கிரந்தங்கள், ஆரீபாஷ்யம், பகவத் விஷயம் முதலியவற்றைக் கற்றார். பின்னர் வாரணாசி சென்று அங்கும் கற்கவேண்டிய கலை களையெல்லாம் கற்றுத் தேர்ந்தார். அப்போது கோவர்த் தன பீடாதிபதி வயது முதிர்ந்து உடல் தளர்ந்த நிலையிலி ருந்தார். வாரணாசியிலிருந்த அரங்காசாரியாரை அழைத்துவரச் செய்து அவரைப் பீடாதிபதியாக்கிச் சில காலமிருந்து திருநாடு அலங்கரித்தார். சீடர்கள் யாவரும் இவரை ஆசாரிய பீடத்தில் அமர்த்திப் பட்டாபிஷேகம் செய்து வணங்கிவரலாயினர். கோவர்த்தனம் திரு அரங்க தேசிகன் என்ற திருநாமத்தாலும் இவர் வழங்கிவரலா யினர். அக்காலத்தில் இவருக்கு யானை, குதிரை, ஒட்டகம், வண்டிகள் முதலான பயணப் பெருமைகளும் இருந்தன. பெரும் புலவர்களான வடநாட்டவர் இருநூறு பேருக்குமேல் இவருடைய சீடர்களாகத் திகழ்ந்தனர்.

வடநாட்டில் வைணவ சமயத் தமிழ் மறைகளை வளர்க்க வழிகண்ட அரங்காச்சாரியார் தமிழிலும் மணிப் பிரவாள நடையிலும் உள்ள முக்கியமான நூல்களை வட மொழியில மொழிபெயர்த்தார். வடநாட்டிலுள்ள வட மொழிப் புலவர்கள் தமிழ் வைணவ நூல்களில் ஞானம் பெற இது பேரளவில் துணை செய்தது. திருவாய்மொழி -பகவத் விஷயம், ஈடு முப்பத்தாறாயிரப்படி வியாக்கி யானம், திருப்பாவை, திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, முமுட்சுப்படி, பூர் வசன பூஷணம், ஆசாரிய ஹிருதயம், தத்துவத் திரயம், அர்த்த பஞ்சகம், பிரபந்த பரித்திரானம், பரந்தபடி, நிகமனப்படி, வார்த்தாமாலை என்பவை வியாக்கியானங்களுடன் இவரால் மொழி பெயர்க்கப் பெற்றன. ஏறக்குறைய முப்பத்தைந்து ஆண்டுக் காலத்தில் திருக்கோயில் நிர்மாண முதல், பிர