பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிருந்தாவனத்தில் 56T6577 117


அன்னையாரின் விருப்பத்தை நிறைவேற்றியவரன்றோ எம்பெருமானார்? 1844-ல் தொடங்கப் பெற்ற திருக் கோயில் திருப்பணி 1849-ல் நிறைவு பெற்றது. பல இலட்சம் பொருட் செலவு செய்தும் தாம் உடனிருந்து பணிபுரிந்த இலட்சுமண சேட்ஜியின் குடும்பத்தினர் தமக் குத் திருக்கோயிலில் எவ்வித உரிமையும் வைத்துக் கொள்ள வில்லை. தன் முனைப்பற்ற இவர்களை இத்தகைய பணி களில் இறங்குவோர் எடுத்துக்காட்டாக கொள்வார் களாக. அரங்காச்சாரியார் தம் தென்னாட்டுத் திருத்தலப் பயணத்தில் வானமாமலைக்கு எழுந்தருளியபோது வான மாமலை சீயர் இவரைத் தழுவி அனைத்து, தேவரீர் மன வாள மாமுனியோ?” என்று சொல்லிப் பாராட்டியதாக வரலாறு. இத்தகைய ஒப்புயர்வற்ற கைங்கரியங்களை நிறைவேற்றிய பெருமகனார் 1874-ல் (பங்குனி மாதம் சுக்ல தசமியில்) தமது அறுபத்தைந்தாம் அகவையில் திரு நாடு அலங்கரித்தார். அதன் பின்னர் மதுரமங்கலம் சீயர் என்னும் எம்பார் சீயர் பிருந்தாவனத்திற்கு எழுந்தருளிய போது அங்கிருந்த சீடர்களின் வேண்டுகோளின்படி சீபெரும்புதுாருக்கு வந்து கோவர்த்தன சுவாமியின் சிலை யைச் செய்வித்து அதனைப் பிருந்தாவனத்தில் பிரதிட்டை செய்வித்தார்.

பிருந்தாவனத்தில் அரங்கமந்திர் ஏற்பட்ட பின்னர், அரங்காச்சாரியார் சுவாமியே கோயில் ஆட்சி முறையைப் பாங்காகக் கவனித்தார். இக்காலத்தில் கோவர்த்தன ஆசாரிய பீடம் பிருந்தாவனத்தில் ஏற்பட்டது. சுவாமி கள் காலமானதும் அவர்தம் ஒரே திருக்குமாராகிய சீநிவா சாச்சாரியார் ஆச்சாரிய பீடத்தில் அமர்ந்து பத்தாண்டுக் காலம் பாங்காக விளங்கினார். இவருக்குப்பின் இவர்தம் திருக்குமாரான இரண்டாவது கோவர்த்தனம் அரங்காச் சாரியார் சுவாமி பீடாதிபதியாக நாற்பத்து மூன்று ஆண்டுகள் வாழ்த்திருந்தார். இவருக்கு மகப்பேறு இல் லாததால் இவர்தம் பெண் வயிற்றுப் பேரராகிய மூன்றா