பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிருந்தாவனத்தில் கண்ணன் 3.19

பங்கே பீகாரி கோயில் : பங்கே பீகாரி என்பது கண்ணனுக்கு வழங்கும் பெயர். நிம்பார்க்கரின் இயக் கத்தின் ஒரு கிளை ஹரிதாஸ் முனிவர் என்ற இசைக் கலைஞரால் நிறுவப்பெற்றது. ஹரிதாஸ் முனிவர் அக்பரின் அரசவைப் பாடகராகிய தான்சென்’ என்பாரின் குருநாதர். ஹரிதாசருக்கும் இங்கு ஒரு கோயில் உண்டு, பங்கே பீகாரி கோயில் பிருந்தா வனத்தல் மிகவும் பெயர் பெற்றது.

இராதாவல்லபர் கோயில்: இக் கோயில் புரீ ஹரிவம்சர் என்பவரால் கட்டப்பெற்றது. இவர் இராதா வல்ல பரை இங்கு எழுந்தருளச் செய்துள்ளார். இங்குக் கண்ணன் இராதையுடன் சேவை சாதிக்கின்றான். மிக்க செல்வச் செழிப்புடன் நிகழ்கின்றது இத்திருக்கோயில்.

பிருந்தாவனத்திலிருக்கும் போதும் ஆயர்பாடி நிகழ்ச்சிகளாக ஆழ்வார் பெருமக்கள் அநுசந்தித்த கண்ணனின் பல சிறுச் சேவகங்கள் நம் மனதில் எழுகின்றன. அவற்றுள் சிலவற்றில் ஆழங்கால் படுவோம்.

தேனுகாசுரன் வரலாறு : தேனுகன் என்ற அசுரன் கம்சனின் ஏவலால் கழுதை வடிவம் கொண்டு காட்டுக் குள்ளே கண்ணனை நலிவதாக வந்தவன். ஒரு நாள் கண்ணபிரான் பலராமனோடும் வேறுசில ஆயர் சிறுவர் களோடும் ஆநிரை மேய்த்துக்கொண்டு கனிகள் கவினுறும்படி மிகுதியாகப் பழுத்து மணம் பரப்பிக் கொண்டிருந்த ஒரு பனஞ்சோலையை அடை ந்தனர்.பனம் பழங்களை விரும்பி உதிர்க்கத் தொடங்கினர். அப் பொழுது அச்சோலைக்குத் தலைவனும் கம்சனின் பரிவாரத்தில் ஒருவனுமான தேனுகன் சினங்கொண்டு கழுதை வடிவத்துடன் எதிர்த்துப் போர் செய்தான். கண்ணன் உடனே மிக எளிதாக அவனுடைய பின்னங் கால்கள் இரண்டையும் பற்றி அவ்வசுரக் கழுதையைச்