பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் முகம்

கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான்,

காடுவாழ் சாதியும் ஆகப் பெற்றான், பற்றி உரலிடை யாப்பும் உண்டான்,

பாவிகாள்! உங்களுக்கு ஏச்சுக் கொலோ? கற்றன. பேசி வசவு உணாதே

காலிகள் உய்ய மழை தடுத்துக் கொற்றக் குடையாக ஏந்தி நின்ற

கோவர்த் தனத்து என்னை உய்த்திடுமின்!”

-ஆண்டாள் இறைவனுடைய அடியார்கள் இறைவனை அநுபவித் தல் பலவகைப்பட்டிருக்கும். சிலர் அவனுடைய திரு நாமங்களைச் சொல்லி அநுபவிப்பர்; சிலர் அவனுடைய திருக்கல்யாண குணங்களைச்சொல்லிச்சொல்லி அநுபவிப் பர்; இன்னும் சிலா இறைவனுடைய வடிவழகை வருணித் துப் பேரின்பம் கொள்வர்; மேலும் சிலர் இறைவன் கோயில் கொண்டருளின திவ்விய தேசங்களின் சிறப்புக் களைப் பேசியும், அவ்விடங்களில் அபிமானமுள்ள வைணவர்களின் பெருமையைப் பேசியும் அநுபவிப்பர். இறுதியாகக் கூறிய முறையே நம்மை வடநாட்டுத் திருப் பதி திருத்தலப் பயணத்தைத் தொடங்க வைக்கின்றது. ‘அவனருளாலே அவன்தாள் வணங்கும் பேறு பெற்றமை யால் மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்ளுகின்றோம்.

இந்த வடநாட்டுத் திவ்விய தேசத் திருப் பயணத்தை என் துணைவியாருடன் செப்டம்பரில் (1968) தொடங் கினேன் காசியாத்திரையாக. அயோத்தியை மட்டிலும்

5. நாச். திரு. - 12:8