பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 20 வடநாட்டுத் திருப்பதிகள்

சுழற்றி உயிரிழக்கும்படி ஒரு பனைமரத்தின்மீது வீசி எறிந்து அவனை அழித்தனன். இந் நிகழ்ச்சியை,

‘தேனுகன் ஆவி போயுக அங்கோர்

செழுந்திரன் பனங்கனி உதிர தானுகங் தெறிந்த தடங்கடல் வண்ணர்’ (ஆ.வி - உயிர் போய்உக தொலைந்து போக;

உகந்து - மகிழ்ந்து) என்று திருமாலிருஞ்சோலை எம்பெருமானை அநுபவித்து மகிழ்கின்றார் திருமங்கையாழ்வார். இதனையே,

‘'தேனுகன் ஆவி செகுத்துப் பனங்கனி

தான்எறிந் திட்ட தடம்பெருந் தோளினால் வானவர் கோன்விட வந்தமழை தடுத்து

ஆனிரை காத்தான் (செகுத்து முடிக்க நினைத்து; தடபெருந்தோள் - அகன்ற பெரிய தோள்; வானவர்கோன் -இந்திரன்; விட - ஏவi - என்று அநுசந்தித்து அகம் மிக மகிழ்கின்றார் பெரியாழ் Hf} } .

காளியனை அடக்கியது: மற்றொரு நாள் கண்ணன் கன்றுகளை ஒட்டிக்கொண்டு ஒருவரும் சென்று வராத வழியே போகத் தொடங்கினான். ஆயர் சிறுவர் அவ்வழி ஏக வேண்டாம் என்றனர்: அவ்வழியில் யமுனை நதி மடு வொன்றில் காளியன் என்னும் ஐந்தலைப் பாம்பு தன் குடும்பத்துடன் இருந்து கொண்டு அம்மடுநீர் முழுவதை யும் தன் நஞ்சினால் கொதிப்படையச் செய்து அணுகின வர்கள் அனைவரையும் பிணமாகச் செய்வதையும் எடுத்துக் கூறி அச்சுறுத்தினர். உடனே அந்த ஐந்தலை அரவைத் தண்டிக்கத் திருவுள்ளங் கொண்டனன்

3. பெரி. திரு. 9. 8 : 7 4. பெரியாழ். திரு. 2.10 ; 4