பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிருந்தாவனத்தில் கண்ணன் 121

கண்ணன். அம்மடுவிற்கு அருகிலுள்ள கடம்ப மரத்திலேறி அம்மடுவிற் குதித்து அந்நாகத்தின் படத்தின்மேல் ஏறி நடனம் ஆடி நசுக்கி அதன் வலியடக்கினன். மாங்கல்யப் பிச்சை கோரித் தன்னை வணங்கின நாக கன்னிகையரின் வேண்டுகோளின் படி அந்தக் காளியனைக் கடலில் சென்று வாழும்படி உயிரோடு விட்டருளினன். இதனைப் பெரி யாழ்வார்,

‘காளியன் பொய்கை கலங்கப்பாய்க் திட்டவன் நீள்முடி ஐந்திலும் கின்று கடஞ்செய்து மீள அவனுக் கருள்செய்த வித்தகன்’ என்றும்,

‘காயும்நீர் புக்குக் கடம்பேறி காளியன் தீயபணத்தின் சிலம்பார்க்கப் பாய்ந்து ஆடி வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன்’

(பனம்-படம், வேய்-மூங்கில்! என்றும், தம் பாசுரத்தில் கண்ணனின், தோள் வலி

வீரத்தை அநுசந்தித்து மகிழ்கின்றார். திருமங்கையாழ். வாரும்,

படஅர வுச்சி தன்மேல்

பாய்ந்துபல் நடங்கள் செய்து மடவரல் மங்கை தன்னை

மார்பகத் திருத்தி னானே.” (அரவு-பாம்பு, மடவரல்-மடமைக் குணம் வாய்ந்த:

மங்கை-பெரிய பிராட்டியார் )

என்ற பாசுரத்தில் இந்நிகழ்ச்சியில் ஆழங்கால் படுவர்.

5. பெரியாழ். திரு 3 . 9 : 7 6. டிை 2 . 1 : 3 7. பெரி. திரு .4 . 8 : 5