பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிருந்தாவனத்தில் கண்ணன் 188

என்ற பாசுரத்தில் அநுசந்திக்கின்றார் பெரியாழ்வார். இங்ஙனம் பலராமனால் செய்யப்பெற்ற அசுர வதத்தைக் கண்ணன் செய்தருளினதாகவே அதுசந்திப்பது ஒற்றுமை நயம் பற்றியதாகும்.

கேசியின் வாயைக் கீண்ட வரலாறு : ஒரு சமயம்

கம்சனால் ஏவப்பட்ட கேசிகன் என்னும் அசுரன் குதிரை யின் வடிவங்கொண்டு ஆயர்கள் அஞ்சி நடுங்கும்படிக் கனைத்துத் துரத்திக்கொண்டு கண்ணனை நோக்கிப் பாய்ந்து வந்தான். அப்பெருமான் தமது திருக்கைகளை நன்றாகப் பெருக்கி நீட்டிக் குதிரையின் வாயிற்கொடுத்துத் தாக்கிப் பற்களை உதிர்த்து உதட்டையும் பிளந்து அதன் உடலையும் இரண்டாக வகிர்ந்து தள்ளிக் கொன்றனன். இந்த நிகழ்ச்சியால் கண்ணன் ‘கேசவன்’ என்ற திருநாம மும் பெற்றனன். இந்த நிகழ்ச்சியைத் திருமங்கை யாழ்வார்,

மாவாயின் அங்கம் மதியாது கீறி

மழை முதுகுன் றெடுத்து ஆயர்தங்கள் கோவாய் நிரைமேய்த் துலகுண்ட மாயன்,” fமா-கேசி என்னும் குதிரை; முதுகுன்று-கோவர்த்

தனம்)

என்று வேறு சில நிகழ்ச்சிகளுடன் ஆழ்ங்கால்படுகின்றார். இன்னொரு பாசுரத்தில்,

மாவாய் பிளந்து மல் அடர்த்து

மருதம் சாய்த்த மால்’ என்று அநுசந்திக்கின்றார். ‘மாவாய்ப் பிளந்த மகன்’. என்று இந்நிகழ்ச்சியை நினைந்து கண்ணனைப் போற்று

T 9. பெரி. திரு. 8.2 s

10. . 5. 1:8 11. இரண். திருவந் 23