பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிருந்தாவனத்தில் கண்ணன் 125

காளை’ என்றும், விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து...உலகுக்கு உண்டகாளை’ என்றும் இந் நிகழ்ச்சியில் ஆழங்கால் படுகின்றார்.

பிருந்தாவனத்தில் இருக்கும்பேபது இருவகையாகக் கண்ணனிடம் அநுபவப்படுகிறோம். ஒன்று, சிறுவனாகபாலகிருஷ்ணனாகவிருந்து மாடுகள் மேய்த்தது; மற் றொன்று, கண்ணன் இளைஞனாக இருந்தபோது இடைப் பெண்களுடன் விளையாடியது. பெரியாழ்வார் அதிகமாக ஈடுபடடது குழந்தைக் கண்ணனிடமே. அந்தப் பாசுரங் கள் எல்லாவற்றிலுமே அசைபோடத் தொடங்கு கின்றோம். யசோதை நிலையில் இருந்து கண்ணள் செய்த சிறு குறும்புகளையெல்லாம் நம் அநுபவமாகக் கொள்ள முயல்கின்றோம். உண்மையான பிள்ளைத் தமிழ்ச் சுவையில் மூழ்கிவிடுகின்றோம்.

யசோதைப் பிராட்டி கண்ணனை நீராட்டிக் குழல் வாரிப் பூச்சூட்டிக் காப்பிட்டுத் தன் பக்கத்தில் படுக்க வைத்துத் தானும் உறங்கிப் பின்பு விடிய எழுந்து வீட்டு அலுவல்களைப் பார்க்கப் போகின்றாள். கண்ணனும் எழுந்து ஊரார் வீட்டில் சென்று பல தீம்புகளைப் புரி கின்றான். இடைப் பெண்கள் இவற்றை யசோதைப் பிராட்டியிடம் வந்து முறையிடுகின்றனர்”. ஒரு வீட்டில் புகுந்து கலத்திலுள்ள வெண்ணெய்முழுவதையும் விழுங்கி அக்கலத்தினைக் கற்பாறையினில் விட்டெறிந்து உடைக் கின்றான் (1). மற்றொரு வீட்டில் உருக்குவதற்காக அடுப் பின்மீது வைத்திருந்த வெண்ணெய் முழுவதையும் விழுங்கி விட்டு மட்கலத்தையும் உடைத்து விடுகின்றான் (3). காய்ச்சின பாலைச் சாய்த்துப் பருகுவதும் (6), அயலகத்தி லுள்ள பல்வேறு வகைப் பலகாரங்களை உண்பதுவும்

14. பெரி. திரு. 8.10:8 15. பெரியாழ். திரு. 3. 9: 7 16. . 2. 9