பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 வடநாட்டுத் திருப்பதிகள்

(7, 9) உறிகளை ஆராய்வதும் (9) இவன் புரியும் தீம்புகள். இவன் செய்த சிறு சேவலகங்களை எல்லாம் பட்டியல் போட்டுக் காட்டியசோதை முலைப்பால் பருக அனுமதிக்க முடியாது என்று கூறுவதாக அமைந்துள்ள பாசுரங்கள்’ பன்முறை படித்து அநுபவிக்க வேண்டியவை. கண்ண னைக் கன்றுகள் மேய்க்கக் காடேற அனுப்பிவிட்டு அப் பிரிவைப் பொறுக்க மாட்டாமல் என் செயப் பிள்ளை யைப் போக்கினேன் எல்லே பாவமே (1) எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே (2) என் மணிவண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே (3) என்று யசோதை கழறியனவா அமைந்த பாடல்கள் கன் னெஞ்சத்தையும் கரைக்க வல்லவை. இந்தப் பாசுரங் களில் கண்ணபிரானைக் காட்டில் போகவிட்ட கொடுமை யைக் கூறி வயிறு எறித்துகொண்டே பகற்பொழுதை யெல்லாம் ஒருவாறு போக்கினதாக ஆழ்வார் யசோதை யின் நிலையிலிருந்து கொண்டு அதுபவிப்பதை நாமும் அநுபவித்து மகிழ்கின்றோம். மாலை நேரத்தில் கண் ணனை எதிர் கொண்டழைக்கும் யசோதை அவன் திரு மேனியின் அணிகளைக் கண்டு மகிழ்கின்றாள்; பிறரையும் காணச் செய்து பெருமை அடைகின்றாள்.

‘சீதக் குதம்பை ஒருகா தொருகாது

செங்கிற மேல்தோன் றிப்பூ,

கோலப் பனைக்கச்சும் கூறை யுடையும்

குளிர்முத் தின்கோ டாலமும்

காலிப் பின்னே வருகின்ற கடல்வண்ணன்

வேடத்தை வந்து கரணிர்!

ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் கங்கை

நானே மற் றாரும் இல்லை’

17. பெரியாழ். திரு. 3, 1

18. . 3.2 1.9. . 8.8; 1