பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிருந்தாவனத்தில் கண்ணன் 27

(குதம்பை - சலங்கை, தோன்றிப்பூ - செங்காந்தன் பூ: கூறை - திருப்பரியட்டம்; பன்னக்கச்சு - கச்சுப் பட்டை; கோடு ஆலம்-வளைத்த மாலை; காலிகன்றுகள்) என்று பாசுரத்தில் ஆழங்கால்பட்டு யசோதைப் பிராட்டி யின் பெருமிதத்தை ஆழ்வார்வழி நின்று அநுபவிக் கின்றோம்.

ஒருநாள் கண்ணன் பிருந்தாவனத்தில் நின்று குழல் ஊத அக்குழலோசையின் அமுதாரையைச் செவிமடுத்த மானிடர் உட்பட மற்ற உயிர்களும் அடைந்த அநுபவத் தைப் பேசுகின்றார் ஆழ்வார். குழல் ஊதும் கண்ணன் நிலை இது :

இடவ ணரை இடத் தோளோடு சாய்த்து

இருகை கூடப் புருவம் நெறித்தேறக் குடவ யிறுபட வாய்கடைக் கூடக்

கோவிந்தன் குழல்கொ டு தின போது’ [அணர் - தாடி, அது உடைய இடம் - மோவாய்க் கட்டை நெறிந்து ஏற - நெறிந்து மேலே கிளர: (வயிறு) குடம் பட குடம்போலக் குமிழித்துத் தோன்ற, வ்ாய்கடை கூட் - வாயின் இரண்டருகுங் குவிய] கண்ணன் குழலூதும்போது அவனது மோவாய்க் கட்டை யின் இடப்பக்கம் இடத்தோள் பக்கமாகத் திரும்பு கின்றது; இரண்டு கைகளும் குழலோடு கூடுகின்றன; புருவங்கள் நெறிந்து மேலே கிளர்கின்றன; வயிறு குடம் போலக் குமிழ்த்துத் தோன்றுகின்றது; வாய் குவிகின்றது. வேறு மெய்ப்பாடுகளும் தோன்றுகின்றன:

‘சிறுவி ரல்கள் தடவிப் பரிமாறச்

செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிப்பு குறுவெயர்ப்புரு வம்கூட லிப்பக்

கோவிந்தன் குழல்கொ டு தின போது

20. பெரியாழ். திரு 3, 6 : 2 21. . 8, 6 :8