பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 வடநாட்டுத் திருப்பதிகள்

tதடவி - துளைகளைத் தடவிக்கொண்டு; பரிமாற

இங்குமிங்கும் செல்ல; கோட - வக்கரிக்க; கொப்ப விக்க - குமிழ்க்க; கூடலிப்ப மேல் சென்று வளைய} குழல் ஊதினபோது கண்ணனின் கைவிரல்கள் துளை களை மூடவும் திறக்கவும் செயற்படுகின்றன; கண்கள் ஒருவகையாக மேல்நோக்கி வக்கரிக்கின்றன; திருப்பவளம் பூரிப்பாலே குமிழ்க்கின்றது; குறுவியர்வை அரும்பின புருவங்கள் மேல் கிளர்த்து வளைகின்றன.

கண்ணனின் குழலோசை ஆயர் மகளிரின் செவிக்கு எட்டியதும், அவர்கள் காம உணர்ச்சியால் உடல் இளைத்து மனம் உருகுகின்றனர். தம் இல்லத்திலுள்ள மாமியார் மாமனார் இவர்களையும் அலட்சியம் செய்து குழலூதும் இடத்திற்கு வந்து திரள்கின்றனர். கயிற்றில் பூக்களை அடரத் தொடுத்தாற்போல் வரிசையாக நின்று கண்ணன் முகத்தைக் கண்டதும் வெள்.கி முகம் கவிழ்ந்து தரையைக் கீறி நிற்கின்றனர். (1). மயில்களையும், மான் பேடைகளையும் ஒத்த வேறு சில இடைப்பெண்கள் உடல் விகாரப்பட்டுத் தம் மலரணிந்த கூந்தல் முடி அவிழ்ந்து அலையவும், கட்டிய ஆடை நெகிழவும், நெகிழ்ந்த துகிலை ஒரு கையால் பற்றிக்கொண்டு கண்ணன் பக்கம் வந்து சேர்கின்றனர் (2).

குழலோசை உம்பர் உலகத்திற்கும் எட்டுகின்றது. மேனகை, திலோத்தமை, அரம்பை, ஊர்வசி முதலிய உம்பர் உலக நடன மகளிரின் நடையழகும் பாட்டழகும் கண்ணனின் நடையழகு, குழலோசை இவற்றின் முன் தோற்றமையால், இனி இவற்றில் ஈடுபடுவதில்லை என்று உறுதி சொல்கின்றனர் (4). ஏனைய மேலுக மாதர் தங்களிருப்பிடத்தில் நிற்கமாட்டாமல் கூட்டம் கூட்ட மாகக் கண்ணன் இருக்கும் இடத்தை அடைகின்றனர். அவன் குழலோசை அவர்களை நீர்ப்பண்டமாக உருக்கு