பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 வடநாட்டுத் திருப்பதிகள்

முத்துப்போல் வேர்க்கவும் திருப்பவளங்கள் துடிக்கவும் நீ அவளுடன் தயிர் கடைந்த படியை அறிவேன். இன்றும் அங்கேயே தயிர் கடையப் போ உனக்கு இங்கு என்ன வேலை?” என்ற உ ள் ளு ைற ப் பொருள்படப் பேசுகின்றான். (2) மற்றோர் ஆய மங்கை, கருத்த மயிர் முடியையுடைய பெண் ஒருத்தியைக் கடைக் கண்ணால் நோக்கினாய்; வோறொருத்தியை மனத்தால் மருவினாய்; இன்னொருத்திக்கு வாக்கு கொடுத்தாய்; மற்றொருத்திக்குக் குறியிடம் அமைத்தாய்; பின்னர் புரிகுழல் மங்கையொருத்தியுடன் கலவி நடத்தினாய்! நீ வளர்வதோடு கூடவே உன் கள்ளம் கவடுகளும் வளர் இன்றன போலும்’ என்று அவனைச் சாடுகின்றாள்; அவனைத் தீண்டுவதற்கும் அஞ்சுகின்றாள் (3). பிறி தொரு பெண், நான் அதிக ஆவலுடன் உன்னை எதிர்பார்த் திருந்தேன். நான் துரிதாக அனுப்பிய வேலைக்காரியுடன் மிகு போகத்தை நன்கு உகந்தாய். அதுவும் உன் இம்புக்குத் தகுந்ததுதான்” என்கின்றாள் (4). இன்னொரு இடைக்குல நங்கை ‘மின்னொத்த நுண் இடையாளொடு இருள் சூழ்ந்த வேளையில் பீதாம்பரத்தில் முக்காடிட்டுக் கொண்டு என் வீதி வழியாக நீ சென்றதை நான் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். வழியில் தென்பட்ட வேறொருத்தியிடம் கண்ணால் பேசிக் கையால் குறிப்புத் தந்ததையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். அவர்களை விட்டு என்னிடம் ஏதுக்காக வந்தாய்? அவர் களிடமே செல்க!” என்று கடிகின்றாள் (5). வேறொர் ஆயர்க் குலப் பெண், நான் உறங்கத் தொடங்கியதும் நள்ளிரவில் என்னைவிட்டு விலகிப்போய் அன்றிரவும் அதற்கு மறுநாளும் எல்லா மகளிரோடும் கலவி புரிந்து வந்தாய். இப்போது என்னருகில் வருவது ஏதுக்கு? அவர்களிடமே சென்று சேர்க” என்று புலக்கின்றாள் (6). மற்றோர் இடையர்க் குல மாது, ‘உன் மாயப் பேச்சு வலையில் இனி அகப்பட்டு ஏமாறோம். நீ