பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிருந்தாவனத்தில் கண்ணன் 33

உகக்கும் மைஅரி ஒண் கண்ணினாரும் அல்லோம். எம் அகத்திற்கு இனி தனியே வருவதை நிறுத்தி விடுக. உன் திருமுக மண்டலத்தாலும் திருப்பவளத்தாலும் திருமுடியாலும் மயங்கி உன் பொய்யான வார்த்தை களினால் ஒருநாள் பட்டபாடு போதும் அய்யா! உன் தேவிமார்களிடமே போய்ச் சேர்க.’’ என்று கை கூப்பு கின்றாள் (7). பின்னும் ஒரு கோபி, என்னைக் குறியிடத்திற்கு வருமாறு ைச ைக காட்டிவிட்ே நெடுநேரம் முல்லைப் பந்தலில் பதுங்கியிருந்த ஒருத்தி யுடன் புணரப்புக்கு, பிறகு என்னைக் கண்டு நழுவினாய்; நீ ஒடிய போதிலும், ஒரு நாளாகிலும் என்னிடம் வருவாயாகில் நான் என் சினம் தீர்வன்’ என்கின்றாள் (8). இங்ஙனம் ஆழ்வார் அதுசந்தித்த நிகழ்ச்சிகளை நாமும் அதுசந்தித்துக் கிருஷ்ணாதுபவம் பெறுகின்றோம்.

இத்தகைய தி கழ்ச்சிகளில் திருமங்கை மன்னனு: ஆழங்கால்பட்டு அநுபவித்ததையும் நினைக்கின்றோம். ஒர் ஆய்ப் பெண் தனியாகப் பந்தடித்துக் கொண்டுள் ளாள். கண்ணபிரான் அவளிடம் சென்று செய்த தீமைகளை முறையிடுகின்றாள் ஒர் இடைச்சி. பெண் பிள்ளையின் தந்தையார் வீடு வந்து சேர்ந்திலர். அன்னையாகிய நானும் வீட்டில் இருந்தில்லேன்; தோழியர் ஒருவரும் அவள் பக்கல் இலர்; என் மகள் தனியாகப் பந்தடித்து விளையாடிக் கொண்டிருந்தாள்: கண்ணன் அவள் தனியிருப்பை நன்கு அறிந்து அடியொற்றி அவளிடம் சென்று பந்தைப் பறித்தனன்; அவளுடைய புடவையைக் கிழித்தான். தீம்பன் என்று பெயர் பெற்ற இவன், பல படிறுகளைச் செய்தனன் என்று சுருங்கச் சொல்லலாமேயன்றி அதிகமாக விவரிக்க முடியாது” என்று யசோதைப் பிராட்டியிடம் முறையிடுகின்றாள். கண்ணபிரான் ஓர் ஆய்ப்

28. பெரி. திரு. 10.7:5