பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 34 வடநாட்டுத் திருப்பதிகள்

பெண்ணுடன் புணர்ந்து பிரிகின்றான். தான் சொன்னபடி குறித்த காலத்தில் திரும்பி வந்திலன். ஊடல் கொண்ட அந்த இடைப் பெண்.

‘ஆனா யரும்ஆ

னிரையும் அங்கொழியக் கூணாய தோர்கொற்ற

வில்லொன்று கையேந்திப் போனார் இருந்தா

ரையும்பார்த்துப் புகுதீர், ஏனோர்கள் முன்னென்

னிதுவென் இதுவென்னா’ (ஆன் ஆயர்-கோபாலர், கூன்-வளைந்த!

என்று புலக்கின்றாள். ஆதிரைகளைக் காப்பதன்றோ ஆம் பணி? அப்பணியைவிட்டு இங்கு ஏன் வந்தீர்? பார்ப்பவர்கள் ஐயுறாவண்ணம் வேட்டைக்குப் போவது போல் வந்து நிற்கின்றீர். எங்களிடம் வருவது உமக்கு அத்தனை அவமானமாயிருக்கின்றதோ? போவோர் இருப்போரைக் கள்ளவிழி விழித்துப் புகுகின்றீர். இங்ஙனம் கூசி ஏதுக்கு வரவேண்டும்? உமது வருகை யினால் பலன் இருப்பின் குற்றம் இல்லை; பழி கழிக்க வந்து போகின்றீர். உம்மிடம் அன்புடையார் ஒருவரும் ஈண்டிலர். வந்த வழி பார்த்துத் திரும்புவீராக’ என்கின் றாள்

நம்மாழ்வாரும் மகள் பாசுரத்தில் இந்தக் கண்ணன் ஆய்ச்சியர் ஊடல் நிலையை அநுபவித்து மகிழ்கின்றார், “நங்காய், உன்மீது அளவற்ற அன்புடின் அணுகி

வந்துள்ள என்னைப் போகு என்று உதறித் தள்ளுவது உனக்கு அறமா?’ என்கின்றான் கண்ணன்.

29. பெரி, திரு. 10.8:6