பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. ஆயர்பாடி அணிவிளக்கு

வடமதுரை இருப்பூர்தி நிலையத்தில் தங்கியிருக்கும் நாம் ,

கண்ணன் கழல் இணை கண்ணும் மனம்உடைவீர்! எண்ணும் திருகாமம் திண்ணம் காரணமே என்ற திருவாய்மொழிப் பாசுரத்தை மனத்தில் அசை போடுகின்றோம். எம்பெருமான் கழலிணை என்று சொல்ல வேண்டிய இடத்து அவனுடைய வேறு திரு நாமங்களைக் கூறாமல் கண்ணன் என்ற திருநாமத்தை எடுத்துக்காட்டினமைக்குக் காரணம் என்ன? அடியார்கட் காகத் தூது சென்றும் திருத்தேர் கடவியும் எளியனாந் தன்மையைக் காட்டினவன் கண்ணன் அன்றோ? ‘சார்வே தவநெறிக்குத் தாமோதரன் தாள்கள்” என்று இவர் சொன்னதையே நினைந்து கண்ணன் கழலிணை என்கின் றார். இவ்விடத்தில்,

பிராட்டியும் அவனும் விடினும் திரு

வடிகள் விடாது திண்கழலாயிருக்கும் என்ற முமுட்சுப்படியின் வாசகம் நினைவுகூர்த்ற்பாலது. சேதநன் உபாயமாய்ப் பற்றுதற்கு இன்றியமை

9 • g

1. திருயாய்; 10.5:1 2, . 19.4:1 3. முமுட்சு-148