பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 வடநாட்டுத் திருப்பதிகள்

யாதனவான எம்ருெமான் திருவடிகள்-கழல் இணைகள்அவனிலும் பிராட்டியாரிலும் சிறந்தனவாகும். அவர்கள் கைவிடினும் இவை என்றும் விடாமல் உறுதியுடையனவாக இருக்கும். இதனைத் தம் திருவுள்ளத்தில் கொண்டே ஆழ்வாரும்,

“வண் புகழ் நாரணன்

திண்கழல் சேரே”

என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார். சேஷ பூதனுடைய சொரூபத்தை நோக்கினும் அவன் இறங்குந்துறை இறை வனின் திருவடிகளேயாகும். இதனைப் பிள்ளை உலக ஆசிரியர் ஒர் எடுத்துக்காட்டால் விளக்குவர்.

‘சேஷியக்கல் சேஷபூதன் இழியும் துறை,

ப்ரஜை முலையிலே வாய்வைக்குமாப்

போலே"5 என்பது முமுட்சுப்படி வாசகம். பாலுண்ணும் பச்சைக் குழவி எங்ஙனம் தாயினுடைய மற்ற உறுப்புகள் யாவை யும் விட்டுத் தான் உயிர் வாழ்தற்கிடனாய் உள்ள அவர் கொங்கையிலே வாய் வைக்கின்றதோ, அங்ஙனமே சேஷி யாகிய ஈசுவரனைப் பற்றப் புகும் சேஷ பூதனும் எம்பெரு னுடைய பல உறுப்புகளையும் விட்டு, தான் உய்வதற்கு இடனாய் உள்ள அவன் திருவடிகளையே பற்றுகின்றான். முற்கூறிய செயல் எவ்வாறு குழந்தைக்கு இயல்போ, அவ் வாறே பிற்கூறிய செயலும் சேதநன் செயலுக்கு இயல் பாய் அமைந்தத்ாகும்.

இறைவனுடைய திருப்பெயரைச் சொல்வதற்கு

அதிகாரம் தேட, வேண்டா, ருசியுடையார் எல்லாரும் அதிகாரிகள் ஆவர். எண்ணும் திருமந்திரம்’ என்னாமல்

4. திருவாய்- 1.2:10 5. முமுட்சு-147