பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii

போட்டியில் முன்னின்று சீநிவாச சாஸ்திரி பொற் பதக்கம் பெற்றவர். இவர்தம் இனிமையாக ஆங்கிலம் பேசும் பாணி கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாதா ரும் வேட்ப மொழிவதாக அமைந்திருப்பதைக் கேட்க வாய்ப்பு பெற்ற அனைவரும் அறிவர். சமயம், தத்துவம் இத்துறைகளில் மிக்க ஈடுபாடுடையவர்; சலியாது நூல் களை மேய்பவர்; பழகுவதற்கு இனிமையானவர்; இவர் தம் அன்பும் பண்பும் இவரை அண்மியவர்கள் அனைவரை ஈர்க்கும் தன்மையவை. உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே’ என்ற தொல்காப்பியத்திற்கு இலக்கியமாகத் திகழ்பவர். இத்தகைய உயர்குணச் செம்மல் இந்நூலுக்கு அணிந்துரை நல்கியது இந்நூல் பெற்ற பேறாகும்.

வைணவ உலகில் அகோபிலம் அழகிய சிங்கர் ஜீயர் சுவாமிகளின் சமயத் தொண்டு, மொழித் தொண்டு இவற்றை இந்திய நாடு, குறிப்பாகத் தமிழகம், ஆந்திரம் நன்கறியும். பல இடங்களில் வடமொழிப் பாடசாலைக ளும், மதுராந்தகத்தில் ஒரு வடமொழிக் கல்லூரியும் இவர் தம் கண்காணிப்பில் நடைபெற்று வருகின்றன.கல்லூரியை வடமொழிப் பல்கலைக் கழகமாக்க முயன்று வருகின் றார். இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாகத் திருவரங்கம் பெரிய கோயிலின் தெற்குவாயிலிலுள்ள முற்றுப் பெறா திருக்கும் இராயர் கோபுரத்தை எழுப்பும் பணியில் சுமார் 62 இலட்சம் செலவில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பெரிய பெருமாள் பணித்த பணியெனக் கொண்டு இப் பெரும்பணியைச் சிரமேற் கொண்டிருக்கின்றார்கள் ஜீயர் சுவாமிகள். உபநிடத முனிவர்போல் நமக்கெல்லாம் காட்சிதரும் ஜீயர் சுவாமிகளின் பொன்னார் திருவடி களில் இந்நூலை அன்புப் படையலாக்குகின்றேன். அன் னாரது ஆசியால் ஆழ்வார்களின் அருளிச் செயல்களிலும், ஆசாரியர்களின் உரைகளிலும், இரகசியக் கிரந்தங்களி லும் எனக்குத் தெளிவும் பக்தியும் மேலும் மேலும் பெருகும் என்பது என் திடமான நம்பிக்கை.