பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயர்பாடி அணிவிளக்கு

வெண்ணெய் களவாடி ஆய்ச்சியர் தாம்பினால் உரலி னிடை ஆப்புண்டிருந்த நிலையை.

‘மத்துஉறு. கடைவெண்ணெய் களவினில்

உரலிடை யாப்புண்டு எத்திறம், உரலினோடு இணைந்திருந்து

ஏங்கிய எளி ேவ’

என்று அநுசந்தித்து ஆறுமாதம் மோகித் திருந்தவராத் லால் அந்தச் செயலை நினைந்து போற்றுகின்றார் மதுரகவிகள். அன்னையாய் அத்தனாய் தன்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன் நம்பி’ என்று உறுதி கொண்டவரன்றோ இவர்? திருமங்கையாழ் வாரும் இந்த நிகழ்ச்சியை,

‘உறிஆர்ந்த நறுவெண்ணெய் ஒளியாற் சென்றங்கு

உண்டானைக் கண்டு, ஆய்ச்சி உரலோடு தறிஆர்ந்த கருங்களிறே போல கின்று (ஆர்க்க தடங்கண்கள் பனிமல்கும் தன்மை யானை’ (ஆர்ந்த-நிரப்பிய: ஆய்ச்சி-யசோதைப் பிராட்டி:

ஆர்க்க-கட்ட, பனிமல்கும்-நீர் நிரம்பிய] என்று அநுபவித்துச் சிதிலமடைவர். பெரியாழ்வாரும் இந்தச் சிறு சேவகத்தை நினைந்து,

“பொத்த உரலைக் கவிழ்த்து அதன்மேல் ஏறி

தித்தித்த யானும் தடாவினில் வெண்ணையும் மெத்தத் திருவயிறு ஆர விழுங்கிய அத்தன்’ (பொத்த-அடியில் ஒட்டையாய் விட்ட்; தடா

மிடா, ஆர்-நிரம்ப; அத்தன்-தலைவன்) என்று அநுசந்தித்து அகம் மிக மகிழ்வர்.

9. திருவாய் 1.3:1 11. பெரி. திரு. 2.10:5 - 10 கண்ணிநுண்-4 12. . : 1.#0:8