பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 வடநாட்டுத் திருப்பதிகள்

வெண்ணெய், தயிர் இவற்றைக் களவாடியுண்ட நிகழ்ச்சி பல்வேறு விதமாகச் சித்திரிக்கப் பெறுகின்றது. ‘தாரார்தடந் தோள்கள் உள்ளளவும் கைநீட்டி, ஆராத வெண்ணெய் விழுங்கிய கண்ணன் பிடிபடு கின்றான். “தாயெடுத்த சிறுகோலுக்கு உளைந்தோடித் தயிருண்ட வாய்துடைத்த மைந்தன்” அந்தத் தயிரை மறைப்பதாகத் துடைத்துக் கொள்ளத் தொடங்கி வாய் நிறையச் சுற்றிலும் பூசிக்கொள்வன்; பிறகு யசோதையால் அடிபட்டு அழுவன்; அஞ்சினாற்போல் நோக்குவன்; வாய் துடிக்கும்படி விக்கி விக்கி அழுவன்; இறுதியாக அஞ்சலி பண்ணுவன். இந்த நிகழ்ச்சி களையும் இவை போன்ற பலவற்றையும் நினைந்து குலசேகரப் பெருமாள், தேவகி புலம்பலாக,

ழுழுதும் வெண்ணெய் அளைக்தொட் டுண்ணுங்

முகிழ்இ ளஞ்சிறுத் தாமரைக் கையும் எழில்கொள் தாம்புகொண் டடிப்பதற்கு எள்கும்

நிலையும், வெண்தயிர் தோய்ந்தசெவ் வாயும் அழுகை யும் அஞ்சி கோக்குமங் நோக்கும்

அணிகொள் செஞ்சிறு வாய்கெளிப் பதுவும் தொழுகை யும்.இவை கண்ட அசோதை

தொல்லை யின்பத் திறுதிகண் டாளே”* (முகிழ்-தளிர் எழில்-அழகு அணிகொள்-அழகிய; நெளித்தல்-துடித்தல்; தொழுகை-கைகூப்புதல்)

என்ற பாசுரத்தில் அதுசந்தித்து அக மகிழ்கின்றார்.

ததியாண்டன் வரலாறு: கண்ணபிரானின் அற்புதச் செயல்களில் ததிபாண்டனுக்கும் அவன் தாழிக்கும் வீடு பேறு அளித்த வரலாறும் ஒன்று. கண்ணன், இளம் பருவத்தில் ஒருநாள் வெண்ணெயைக் களவாடியதை

13. பெரு. திரு. 7:8