பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயர்பாடி அணிவிளக்கு 155

யசோதை நேரில் கண்டுகொண்டாள். பிள்ளையைத் தண்டிக்க எண்ணி அப்பிரானைப் பிடித்தற்கு ஓடினான். கண்ணன் அதற்கு அஞ்சியதுபோல் நடித்துத் தாயின் கைக்கு அகப்படாமல் தப்பித் ததிபாண்டன் என்னும் இடையன் வீட்டில் புகுந்து கொண்டான். அவ்விடம் நோக்கி யசோதை விரைந்து வருதலறிந்து தன்மீது தயிர்த் தாழியைக் கவிழ்த்துச் சிறிது நேரம் ஒளித்து வைக்குமாறு வேண்டினன் கண்ணன். ததிபாண்டனும் அங்ஙனமே செய்து தாழியின் அருகில் இருந்தான். பிள்ளையைத் தேடிவந்த யசோதைப் பிராட்டி அங் கிருந்த ததிபாண்டனிடம் கண்ணன் வந்த செய்தியை உசாவ, அவன் “இங்கே கண்ணன் இலன்’ என மறு மொழி தந்தான். ‘வீட்டுக்கு வரட்டும் ஒருகை பார்க் கிறேன்’ என்று முணுமுணுத்துக்கொண்டு வீடு திரும் பினாள் யசோதைப் பிராட்டி.

அவள் ஏகினதும் ததிபாண்டன் கண்ணனை வெளி விடாமல் தான் மூடிய தாழியின்மீது சடக்கென ஏறி உட்கார்ந்து கொண்டனன். உள்ளிருந்த பெருமான் தாய் சென்றுவிட்டமையால் தன்னை வெளிவிடுமாறு வேண்டினன். இடையனோ பல பிறவிகளில் செய்த பெருந்தவப் பேற்றால், அவனைச் சர்வேசுவரனாகக் கருதி, “எனக்குத் தேவரீர் வீடுபேற்றை நல்கினாலன்றி வெளியில் விடேன்’ எனக் கூறித் தாழியை முன்னிலும் பலமாக அழுத்திக்கொண்டனன். கண்ணன் அவன்மீது கருணையுடையவனாய் உனக்கு வீடுபேறு தந்தேன்; இனி என்னை வெளி விடுக” என்றனன். தனக்கு அருளிய பெறற்கரிய பேற்றுக்கு மகிழ்ந்தனனாயினும், வேறொரு சிந்தையுடையவனாய், மீண்டும் தாழியை அழுத்திக் கொண்டே இருந்தனன். கண்ணன் இடையனை நோக்கி “ஏன் காலம் தாழ்த்துகின்றாய்?’ என்று வினவ, இடை யன் ‘தேவரீர் திருவருள் அடைவதற்குக் காரணமாக இருந்த இத் தாழியைத் தனியே விட்டு நீங்கேன்; இத்ற்கும் யான் பெற்ற பேற்றினை அளித்தருள்க’ என்