பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயர்பாடி அணிவிளக்கு 157

என்றேனோ பிரகலாதாழ்வனைப்போலே; இங்கில்லை என்றேனோ ததிபாண்டனைப்போலே’ என்று கூறிய வார்த்தையையும் தி ைன க் கி ன் றோ ம் . ஆசாரிய ஹிருதயத்திலும் அதன் வியாக்கியானத்திலும் இச் செய்தி வருகின்றது.

மருதமரங்கள் முறிந்த வரலாறு:குழந்தைப் பருவமுன்ன கண்ணன் துன்பத்துக்குள்ளாக்கும் பல திருவிளையாடல் களைச் செய்யக் கண்டு சினங்கொண்ட யசோதைப் பிராட்டி அவனைத் திருவயிற்றிற் கயிற்றினால் கட்டி ஒர் உரலில் பிணித்து விட்டாள். கண்ணன் அவ்வுரலை இழுத்துக் கொண்டு தவழ்ந்து அவண் இருந்த இரட்டை மருதமரத்தின் நடுவே எழுந்தருள, அவ்வுரல் குறுக்காய் நின்று இழுக்கப் பெற்றதனால் அம்மரங்கள் இரண்டும் முறிந்து விழுத்தன. உடனே முன் ஒருகால் நாரத முனிவரின் சாபத்தினால் அம்மரங்களாய்க் கிடந்த நளகூபரன், மணிக்ரீவன் என்னும் குபேர புத்திரர்கள் இருவரும் சாபந் தீர்ந்து சென்றனர். இதனை, “இருங்கைமா கரிமுனிந்து’ என்ற பாசுரத்தில் திருமங்கையாழ்வார் பல நிகழ்ச்சிகளுடன் சேர்த்து அநுசந்திக்கின்றார். நம்மாழ்வாரும் கண்ணனின் சிறு சேவகங்களை அநுபவிப்பதில் எல்லை கடந்த இன்பம் அடைகின்றார்.”

வையம் ஏழும் கண்ட வரலாறு : ஒரு நாள் கண்னன் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தனன். கண்ண்ன் மண்ணைத் தின்றதாக பலராமன் மூலம் கேள்வியுற்ற யசோதைப் பிராட்டி ஒடிப்போய் கண்ணன்ை வாசி யெடுத்துக்கொண்டு இல்லத்தினுள் ஏகி, “ஏன் மண்ணைத் தின்றாய்?” என்று அச்சுறுத்தினாள். கண்ணனோ அம்மா நான் மண்ணைத் தின்னவில்லை;

15 பெரி. திரு. 2. 10:7 16. திருவாய் 6 . 4