பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 வடநாட்டுத் திருப்பதிகள்

அண்ணன் வேண்டுமென்றே கோள் சொல்லுகின்றான்; என் வாயைப் பார்’ என்று வாயைத் திறந்து காட்டி ன். யசோதை அந்த வாய் வழியாகக் கண்ணனின் திருவயிற்றில் வையம் ஏழினையும் கண்டு வியப்புற்றாள். இவன் ஆயர் மகன் அல்லன், அருந் தெய்வம்’ என்று அறுதியிட்டனள். சிறிது நேரத்தில் அந்த மயக்க நிலை மாறித் தன்னுடைய ம க ன க ேவ எண்ணிக் கொண்டாள். இந்த நிகழ்ச்சியைப் பெரியாழ்வார்,

‘கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர்

பைய ஆட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்

ஐய நாவழித் தாளுக்கு அங்காந்திட

வையம் ஏழும்கண் டாள்பிள்ளை வாயுளே.'17 என்ற பாசுரத்தில் அநுசந்திக்கின்றார். ஆனால் கண்ண னாகிய குழந்தையை நீராட்டி நாவழிக்க முயலுங்கால் இக்காட்சியைக் கண் ட த ாக அநுசந்திக்கின்றார். கண்ணன் பார்த்தனுக்கு ஞானக் கண்ணைக் கொடுத்துத் தன் பேருவத்தைக் காட்டினதைப்போல, யசோதைப் பிராட்டிக்குத் தன்னுடைய தெய்வத் தன்மையைக் காட்ட வேண்டுமென்ற பேரவாவினால் இங்ஙனம் செய்தனன் போலும். கண்ணன் முலைப்பால் உண்ணும் போது கொட்டாவி விடுவதுபோல் வாயைத் திறந்து தன் பேருருவம் காட்டினதாகவும் சில புராணங்கள் கூறும்.

பூதனை வரலாறு : ஒரு நாள் கம்சனால் ஏவப்பெற்ற பூதனை என்ற ஒர் அரக்கி அழகிய ஆயர் மகள்போல் வடிவங் கொண்டு வந்து கண்ணனுக்கு நஞ்சு தீட்டிய முலையூட்டினாள். கண்ணன் பாலையுண்டதுடன் பாதகியின் உயிரையும் உண்டான். பூதனை பெரிய அரக்கி உருவத்துடன் மலைபோல் பிணமானாள்.

17. பெரியாழ். திரு-1. 1:6