பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 வடநாட்டுத் திருப்பதிகள்

மாலையில் கன்று காலிகளை ஒட்டிக்கொண்டு வீடு திரும்பும் ஒர் ஒற்றையடிப் பாதையருகில் காத்திருந்தான். அவ்வழியாக வரிசையாக வரும் கன்றுகளை ஒவ்வொன் றாக விழுங்கி விட்டான்; கண்ணனின் தோழர்களையும் ஒவ்வொருவராக கபளிகரம் பண்ணிவிட்டான். இறுதி யாக வந்தவன் கண்ணன். அவனையும் அலகால் கொத்தி விழுங்கினன். உள்ளே சென்ற கண்ணன் அசுரன் வயிற்றில் நெருப்புபோல் எரித்தான். அசுரன் அதனைப் பொறுக்கமாட்டாமல் கண்ணனை உமிழவே, அவன் வெளியில் வருங்கால் தன் இரு கைகளாலும் இரண்டு அலகுகளையும் பிடித்துக்கொண்டு வெளியே குதித்துக் கொக்கினை இரு கூறாகக் கிழித்து அனைவரையும் விடுவித்தான். இச் செயலைத் திருமங்கையாழ்வார், “புள்வாய்ப் பிளந்த புனிதா’ என்று அநுசந்தித்து அகமகிழ்கின்றார் ‘புள்ளின் வாய்க்கீண்டானை’ (கீண்டல்-பிளத்தல்) என்று ஆண்டாள் இந்த நிகழ்ச்சியில் ஆழங்கால்படுகின்றார். ‘இகல் கொள் புள்ளைப் பிளந்ததும்’ என்று இதனை அநுபவித்து மகிழ்கின்றார் நம்மாழ்வார்.

‘பள்ளத்தில் மேயும் பறவை உருக்கொண்டு கள்ள அசுரன் வருவானைத் தான்கண்டு புள்இது என்று பொதுக்கோ வாய்கீண்டிட்ட பிள்ளை'28 (புள்ளத்தில் மேயும் பறவை-கொக்கு பொதுக்கோ

பொதுக்கெனi என்று பெரியாழ்வார் ஆழங்கால்படுவதையும் எண்ணி மகிழ்கின்றோம். -

சகடாசுரன் வரலாறு : ஒரு சமயம் யசோதைப் பிராட்டி குழந்தை கிருஷ்ணனை ஒரு வண்டியின் அடியில்

25. பெரி. திரு. 1 , 1 : 4 27. திருவாய். 6, 4 : 6 26. திருப். 13 28. பெரியாழ். திரு. 2. 5:4