பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 வடநாட்டுத் திருப்பதிகள்

கொன்றது ஆகிய வேறு ஐந்து சிறு சேவகங்களையும் சேர்த்து அநுபவித்து மகிழ்வதைக் காணலாம். கண்ண னின் ஆயர்பாடி நிகழ்ச்சிகள் எண்ணற்றவை. ஆழ்வார் பெருமக்கள் அனைவருமே இந்நிகழ்ச்சிகளில் ஆழங்கால் பட்டு அநுபவிக்கின்றனர். ஆயர்பாடியில் இருக்கும்போது நாமும் இந்த நிகழ்ச்சிகளை அநுபவித்து மயிர்சிலிர்க் கின்றோம்,

இந்த நிலையில் திவ்விய கவியின் பாசுரம் நினைவுக்கு வர, அதில் ஆழங்கால்படுகின்றோம்.

கலந்தமர ரோடும் கரைகண்டா ரோடும் பொலிந்துதிரு காட்டிருக்கப் போவீர்-மலிந்தபுகழ் அண்டர்.ஆய்ப்பாடி அமலர் அடியார் அடியார் தொண்டராய்ப் பாடித் தொழும்.’ {அமரர்-நித்திய சூரிகள்; கரைகண்டார்-முத்தர்கள்; பொலிந்து-சிறப்புற்று:குலுந்த திருநாடு-பரமபதம்; மலிந்த-நிறைந்த, அண்டர்-இடையர், அமலர்கண்ணபிரான்; அடியார்-பாகவதர்கள்; தொண்ட ராய்-அடிமைப்பட்டவராய்; தொழும்-வணங்குவீர்; என்பது பாசுரம். கண்ணனாகத் திருவவதரித்து விளை யாடின இடமாகிய திருவாய்ப்பாடியிலுள்ள அடியாரின் அடியார்க்கு அடியவராகி அவர்தம் திருக்குணங்களைப் பாடித் துதித்தால் அதன் பயனாக நித்தியருடனும், முத்த ருடனும் ஒருசேரக் கலந்து பேரானந்தம் அநுபவிப்பதற்கு வாய்ப்பு உண்டாகும் என்ற அய்யங்காரின் உபதேசத்தில் மனம் அழுந்திய நிலையில் நம் இருப்பிடத்திற்குத் திரும்பு கின்றோம்