பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. பாற்கடல் கிடக்கும் பதுமநாபன்

‘பாலாழி கிேடக்கும்

பண்பையாம் கேட்டேயும் காலாழும் கெஞ்சழியும்

கண்சுழலும்-கீலாழிச் சோதியாய்! ஆதியாய்!

தொல்வினை எம் பால்கடியும் நீதியாய்! கிற்சார்ந்து நின்று.’’! (டால்ஆழி-திருப்பாற்கடல்; ஆழும்-தடுமாறும்; நீல் ஆழி-நீலக்கடல்: சோதி-திறம்; சார்ந்து நின்றுஅணுகி1 என்று திருப்பாற் கடலில் பள்ளி கொண்டிருக்கும் எம் பெருமானை அநுபவிக்கின்றார் நம்மாழ்வார். ‘நின்ன்ை அடியேன் நேரில் கண்டதில்லை. நீ திருப்பாற்கடலில் கிடந்திருக்கும் திருக்கோலத்தைச் சாத்திரம் அறிந்த பெரியோர்களின் வாயிலாகக் கேட்ட அளவிலேயே இப் படியும் ஒர் அழகு உண்டோ’ என்று ஈடுபட்டுக் கால், நடை தாராமல் ஆழ்ந்து போகின்றன; நெஞ்சு நீர்ப்பண் டமாகக் கரைந்து அழிந்து போகின்றது: கண்கள் ஒரு பொருளையும் பார்த்து அறிய முடியாதப்டி சுழலத் தொடங்குகின்றன’ என்று கூறுகின்றார். இந்தப்

1. பெரி திருவந்-34