பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 வடநாட்டுத் திருப்பதிகள்

பாசுரத்தால் எம்பெருமான் சயனத் திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார் என்பது தெரிகின்றது. எம்பெரு மானின் திருநாமம் rராப்திநாதன் (திருப்பாற்கடல் நாதன்), தெற்கு நோக்கிய திருமுகமண்டலங் கொண்டு புயங்க சயனத்தில் (பாம்பனை மேலான்) காட்சி தருகின்றார். தாயார், கடல் மகள் நாச்சியார். இந்த எம்பெருமானை மானசீகமாகத்தான் சேவிக்கவேண்டும்.

திருப்பாற்கடல் நாதனைப்பற்றிச் சாத்திரம் என்ன கூறுகின்றது? இவன் வியூக நிலை எம்பெருமான். வியூக மாவது, லீலாவிபூதியில் (இவ்வுலகில்) அதன் படைப்பு, அளிப்பு, அழிப்பு இவற்றை நடத்துவதற்காகவும், சமுசாரி கட்கு வேண்டியவற்றை ஈந்து, வேண்டாதவற்றைப் போக்கி அவர்களைக் காத்தற் பொருட்டும், தன்னை இடையறாது நினைப்பவர்க்கு (உபாசிப்பவர்கட்கு) அவர் தம் தளைகளைப் போக்கித் தன்னை வந்து அடைவதற்குக் காரணமான பேரருளைச் சுரப்பதற்காகவும் வாசுதேவன், சங்கர்ஷணன்,பிரத்யும் நன், அநிருத்தன் என்ற பெயர் களுடன் இருக்கும் நிலையாகும். இவற்றுள் வாசுதேவ ரூபமான பரத்துவத்தில் ஞானம், சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம், தேஜஸ் என்ற ஆறு குணங்களும் நிறைந்திருக்கும். ஏனைய மூன்றில் அவரவர் மேற்கொண்ட செயலுக்குத் தக்கவாறு ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டு குணங்கள் விளக்கமாக இருக்கும். சங்கர்ஷணரானவர் ஞானம், பலம் என்ற இரண்டு குணங்களையுடையவர்; இலுர் பிரகிருதிக்குள் உருமாய்ந்து கிடக்கும் உயிர்த் தத்து வத்திற்குத் தலைவராக நின்று அதனைப் பிரகிருதி யினின்றும் வேறாக்கிப் பிரத்யும்ன நிலையையும் அடைந்து வேதம் முதலிய சாத்திரங்களை வெளியிடுவதையும் உலக

2. இறைவன் இருக்கும் இருப்பைப் பரந்துவம், வியூகம், விபவம். அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்று ஐந்து வகைஆோடு இருப்ப தாக வைணவ நூல்கள் பேசும்.