பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாற்கடல் கிடக்கும் பதுமநாபன் 165

அழிப்பையும் செய்பவராக இருப்பார். பிரத்தியும் நரானவர் ஐசுவரியம், வீரியம் என்ற குணங்களோடு கூடி ஞானத்திற்கு ஊற்றுவாயான மனம் என்ற தத்துவத் திற்குத் தலைவராக நின்று சாத்திர முறைப்படி ஒழுக வேண்டிய தர்மோபதேசத்தையும் சுத்த வர்க்க சிருஷ்டி யையும் செய்ய வேண்டியவராக இருப்பார். அநிருத்தரானவர் சக்தி, தேஜஸ் என்ற இருகுணங் களோடும் கூடி உலகப் பாதுகாப்பிற்கும் உயிர்கள் ஈடே றுவதற்குத் தகுதியான தத்துவ ஞானங்களைக் கொடுத் தற்கும், காலப் படைப்பிற்கும் , மிச்ரவர்க்க சிருஷ்டிக்கும் உரியவராக இருப்பார்.

இந்த நான்கு வியூகங்களும் ஒவ்வொன்றும் மும்மூன் றாகப் பன்னிரண்டு கிளை வியூகங்களாகப் பிரியும், வாசு தேவர் கேசவன், நாராயணன், மாதவன் என்று மூன்றாக வும்; சங்கர்ஷணர் கோவிந்தன், விஷ்ணு. மதுசூதன. ராகவும்; பிரத்யும்னர் திரிவிக்கிரமன், வாமனன், சீதர னாகவும்; அநிருத்தர், இருடிகேசன், பத்மநாபன், தாமோ தரனாகவும் பிரிவர். இவர்கள் பன்னிரண்டு ஆதித் தர்களாக நின்று பன்னிரண்டு திங்கள்களின் தலைவர் களாகப் பன்னிரண்டு திசைகளில் வீற்றிருப்பர். இவர் களின் அறிகுறியாகத்தான் வைணவர்கள் தமது திருமேனி யில் திருமண் காப்பினை (புண்டரத்தை) இட்டுக்கொள் வர். இவர்கள் மரணமாகும் வரையிலும் திருமேனியைக் காப்பர் என்பது வைணவர்களின் நம்பிக்கை. திருவாய் மொழியிலுள்ள பன்னிரு திருநாமப் பாட்டும்’, தேசிகப் பிரபந்தத்திலுள்ள பன்னிரு நாமம்’ என்ற சிறு பிரபந்த மும் இந்தப் பன்னிரு எம்பெருமான்களைப் பற்றியவை. திருமண் தரித்துக் கொள்ளும்போது இந்தப் பாசுரங் களை அதுசந்திப்பது வழக்கம். இதனால் இறைவன்

3. திருவாய்.2, 7 - 4. தேசிகப் பிரபந்தம்-பன்னிரு நாமம் (206-292)