பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாற்கடல் கிடக்கும் பதுமநாபன் 167

காப் புதிராக இருப்பதாகவே அவர்கள் கருதுகின்றனர். இந்த இடத்திலேயே பதுமநாபனின் கொப்பூழில் நான் முகன்தோன்றி உலகினையும் பிறவற்றையும் படைத்தான்.

இந்தத் திருப்பாற்கடல் எம்பெருமானை முதலாழ் வார்கள் மூவரும், திருமழிசையாழ்வார், குலசேகராழ் வார் பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய ஒன்பதின்மர் மங்களாசாசனம் செய்துள்ளனர். வரை மேல் மரகதமே போலத் திரை மேல் கிடந்தான்’ என்று பொய்கையாழ்வாரும், ‘பாற் கடலான்’ மாகடலான்’ என்று பூதத்தாழ்வாரும், ‘பாற்கடல் உளான்” என்று பேயாழ்வாரும் இந்த எம் பெருமானைக் குறிப்பிடுகின்றனர். பெரியாழ்வார்,

‘அரவத்து அமளியி னோடும்

அழகிய பாற்கட லோடும் அரவிந்தப் பாவையும் தானும்

அகம்படி வந்து புகுந்து’’’ (அரவம்-படுக்கை அமளி-படுக்கை; அரவிந்தப் பாவை-தாமரை மலால் வாழும் பிராட்டியார்: அகம்படி-உடம்பு) என்றும்,

பனிக்கடலிற் பள்ளிக்கோனை

பழகவிட் டோடிவந்துனன் மனக்கடலில் வாழவல்ல

மாயமணாள கம்பீ. “ 1.பனி-குளிர்ந்த, கடல்-திருப்பாற்கடல்; பள்ளி கோளை-பள்ளி கொள்ளுதலை; பழகவிட்டு-பழகி

யதாகவிட்டு]

5. முதல் திருவந்-25 8. மூன் திருவந்-31 6. இரண் திருவந்-3 9. பெரியாழ். திரு. 5.219

? . .-28 10. . 5, 4; 9