பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#88 வடநாட்டுத் திருப்பதிகள்

என்றும் குறிப்பிடுவர். இரண்டிலும் தன் வியூக நிலையை விட்டு அந்தர்யாமித்துவ நிலையை மேற்கொண்டதைக் குறிப்பிடுகின்றார் ஆழ்வார். இந்த ஆழ்வாரின் ஒரு மகளான திருமகளார்,

‘பாற்கடலுள் பையைத் துயின்ற

பரமன் அடிபாடி’

என்று பேசுவர். திருமங்கையாழ்வார் ‘பாற்கடலாய்!’ “கடல் கடந்த கனியே’, ‘பாற்கடல் கிடந்தாய்’’ என்றெல்லாம் கூப்பிட்டழைப்பர். மேலும், இந்த ஆழ் வார் இந்த எம்பெருமானை அரவு அணை வேலைக் கிடந்தாய் ‘ ‘பாற்கடல் கிடந்த பரமனார்’, ‘கடல் கிடந்த கருமணி’, ‘அறிதுயில் அலைகடல் நடுவே, ஆயிரம் சுடர்வாய் அரவு-அனைத் துயின்றான் ‘18, ‘பரவை துயில் ஏறு’ ‘வங்கம்மலி தடங்கலுள் அநந்தன் என்னும், வரி அரவின் அணைத் துயின்ற மாயோன்’ என்பன சொற்றொடர்களால் நமக்கு இனங்காட்டுவர்.

நம்மாழ்வார் திருப்பாற்கடல் நாதனைப் பாற் கடல் சேர்ந்த பரமன்’ ‘அலை கடல் பள்ளி அம் மான்’ ‘தொடுகடல் கிடந்த எம்கேசவன் ’ என் றெல்லாம் இளங்காட்டுவர். இன்னும் தெளிவாக இவர்,

‘ஏகமூர்த்தி இருமூர்த்தி

.p u#

11. திருப்-5 18. . 5.7:6 12. திருநெடுந்-5 19. . 7,8:8 13. திருநெடுந்-15 20. . 7.8:1 14. பெரி. திரு. 1.6;6 21. திருவாய் 37.1 15. . 3.5:2 22. . 5.8:7 16. டிை 4.10:4 28. . 10.9;7

17. . 5.6:1 24. டிை 4.3:3