பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாற்கடல் கிடக்கும் பதுமநாபன் o

என்று இந்த எம்பெருமானைக் காட்டுவர். ஏகமூர்த்தி என்பவர் பரவாசுதேவர்; இருமூர்த்தி என்பவர்கள் பரவாசுதேவர், வியூக வாசுதேவர்; மூன்றுமூர்த்தி சங்கர் ஷணர், பிரத்யுத்னர், அநிருத்தர்; பலமூர்த்தி ‘எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்’ என்றபடி பல அவதார மூர்த்திகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

இந்த ஆழ்வார் வியூகநிலை எம்பெருமானை மிக அழகான உவமையாலும் எடுத்துக் காட்டுவர்.

‘மாகீர் வெள்ளி மலைதன் மேல்

வண்கான் நீல முகில்போல துர்ேக் கடலுள் துயில்வானே” [மாநீர்-ஆழ்ந்த நீர் வண்கார்-அழகிய கார்காலம்; முகில்-மேகம்: துளநீர்க்கடல்-வெளுத்த பாற்கடல்; திருப்பாற் கடலில் திரு அனந்தாழ்வான் மீது எம்பெருமான் திருக்கண் வளர்வதானது ஆழ்ந்த நீர்க் குள்ளே அ ழு ந் தி ன .ெ தா ரு வெள்ளிமலையின்மீது காளமேகம் படிந்தாற்போன்றுள்ளது என்கின்றார்.

இங்ஙனம் இந்த எம்பெருமான்மீது ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்யப்பெற்றுள்ள திருப்பாசுரங்களில் ஆழங்கால் பட்டு இந்த எம்பெருமான்களை அநுபவிக் கின்ற நிலையில் திவ்விய கவியின் திருப்பாசுரம் நினை விற்கு வர, அதனையும் அநுசந்திக்கின்றோம்.

“தொழும்பாய நான்நல்ல

சூதுஅறிந்து கொண்டேன் செழும்பாய அலைமுத்தம் சிந்தி-முழங்கும்

25. திருவிருத்-1 26. திருவாய் 8, 5 : 4