பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. வேங்கடம் மேவிய விளக்கு

‘நீலத்திரைக் கடல் ஓரத்திலே

கித்தம் தவம் செய் குமரிஎல்லை-வட

மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு’

என்று பாடினார் தேசிய கவி பாரதியார். இந்த மாலவன் குன்றமே திருவேங்கடம் என்பது. சிலப்பதிகாரம் குறிப் பிடும் நெடியோன் குன்றமும் இதுவேயாகும். ஆயின் தொல்காப்பியப் பாயிரத்திலும், சங்க இலக்கியங்களிலும் குறிப்பிடப்பெற்றுள்ள “வடவேங்கடம்’ என்னும் மலைத் தொடர் இதனினின்றும் முற்றிலும் வேறுபட்டது என்பதை ஆழ்ந்து கற்றோர் நன்கு அறிவர். இன்றுள்ள திருப்பதி மலை மிகவும் புகழ் அடைந்தது சமயச்சார்பு பற்றியதேயாகும் என்பதை நாம் அறிவோம். இடைக் காலத்தில் இது திருத்தலப் பயணிகளின் முக்கிய இடமாக அமைந்ததற்குக் காரணம் சமயச் சார்பு பற்றியதே யாகும்.

திருப்பதி புகழோங்கிய காலம் : இன்று பெரும்பான் மையோர் திருப்பதி மலையைத் திருப்பதி என்றே வழங்குகின்றனர். வி வர ம் அ றி ந் தோர் இதனைத் ‘திருமலை என்று கூறுகின்றனர். இம்மலை ஏழுமலை’

1. பாரதியார் கவிதைகள்-செந்தமிழ் நாடு-5.

2. இவ்வாசிரியரின் திருவேங்க்டமும் தமிழ் இலக்கியமும்’ (பாரி

நிலைய வெளியீடு) என்ற நூலில் காண்க.

3. மலையைத் “திருமலை என்றும், மலையின் கீழுள்ள நகரைத்

“திருப்பதி’ என்றும் வழங்குவதே சரியாகும்.