பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 வடநாட்டுத் திருப்பதிகள்

என்றே வழிவழியாக வழங்கப் பெறுகின்றது. இன்று பேருந்து வழியாகச் செல்வோர் இந்த ஏழுமலை களையும் வரிசையாகக் காணலாம். இப்பொழுது பேருந்துகள் மலையிலிருந்து இறங்கும் வழியில் இம்மலை களின் பெயர்ப் பலகைகளைக் காணலாம். ஒன்றிரண்டு ஆண்டுகட்கு முன்னர் இதுவே ஏறும் வழியாகவும் அமைந்திருந்தது. இந்த வழியில் கீழிருந்து மேலே செல்லுங்கால் முதலில் காண்பது எருத்துமலை (விருஷ பாத்திரி). அடுத்து முறையே நீலமலை (நீலாத்திரி), மைவரை (அஞ்சனாத்திரி), பாம்புமலை (சேஷாத்திரி), கருடமலை (கருடாத்திரி), நாராயணமலை (நாராய ணாத்திரி), வேங்கடமலை (வேங்கடாத்திரி) என்ற மலைகளைக் காணலாம்.

ஆழ்வார் பெருமக்களால் (6-8 நூற்றாண்டுகள்) மங்களாசாசனம் செய்யப்பெற்ற நூற்றெட்டுத் திருப்பதி களுள் இதுவும் ஒன்று. வடநாட்டுத் திருப்பதிகள் என்ற பகுதியில் அடங்கும் பன்னிரண்டில் இது முதலாவதாக இடம் பெறுவது. கோயில் (திருவரங்கம்), திருமலை, பெருமாள் கோயில் (காஞ்சி) என்று வைணவப் பெரு மக்களால் போற்றப்பெறும் மூன்று திவ்விய தேசங்களுள் இது நடுநாயகமாகத் திகழ்கின்றது. இத்தகைய பெருமை வாய்ந்த திருவேங்கடத்தைப்பற்றி 213 பாசுரங்கள் தாலாயிரத்தில் காணப்பெறுகினறன. இவற்றைப் பாடிய வர்கள் பத்து ஆழ்வார் பெருமக்கள்; பாடிய விவரம்:

1. பொய்கையாழ்வார் 10 பாசுரங்கள் 2. பூதத்தாழ்வார் 9 பாசுரங்கள் 3. பேயாழ்வார் 19 பாசுரங்கள் 4. திருமழிசையாழ்வார் 15 பாசுரங்கள் 5. திருப்பாணாழ்வார் 2 பாசுரங்கள் 6. குலசேகராழ்வார் 11 பாசுரங்கள்

4. அத்திரி-மலை (LQar)