பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேங்கடம் மேவிய விளக்கு 3

7. பெரியாழ்வார் 7 பாசுரங்கள்

8. ஆண்டாள் 16 பாசுரங்கள்

9. திருமங்கையாழ்வார் 62. பாசுரங்கள்

10. நம்மாழ்வார் 62 பாசுரங்கள்

மொத்தம் 2.13

இப்பாசுரங்களைத் திருவேங்கடக் கலம்பக ஆசிரியர் முத் தமிழ்க்கவி வீரராகவ முதலியார் “பதின்மர் செந்தமிழ்’ என்று போற்றிப் புகழ்வர்.

திருவேங்கடத்தின் புகழ் : ஆழ்வார் பெருமக்களால் மங்களாசாசனம் பெற்ற திருவேங்கடம் பதினொன்றாம் நூற்றாண்டில்தான் பெரும்புகழ் அடையத்தொடங்கியது. இராமாநுசர் திருவேங்கடமுடையான் திருக்கோயிலின் பால் காட்டிய அக்கறையும் அவருடைய சொந்தப் பெரு மையும் சிறப்புமாகச் சேர்ந்து திருக்கோயிலின் புகழை மிக வும் உயர்த்தி விட்டது. இராமாநுசர் திருமலைக்கு மூன்று தடவை வந்ததாக அவர் வரலாற்றால் அறியக் கிடக்கின் றது. இன்று திருமலையில் நடைபெறும் வழிபாட்டு முறை கள் யாவும் இராமாநுசர் வகுத்தவையே என்று திருமலை யொழுகு’ என்ற நூலால் அறிகின்றோம். இராமாநுசர் திருவேங்கடமுடையானுக்குக் கைங்கரியம் செய்யும் அர்ச்சகர்கட்குக் குடியிருப்பு வசதிகள், பிற வசதிகள் இவற்றைச் செய்தார். தன் தாய் மாமனாகிய திருமலை ந ம் பி ைய யே இவற்றையெல்லாம் கண்காணிக்கும் மேலாளராகவும் நியமனம் செய்தார். இராமாநுசருடைய சமூகச் சீர்திருத்தமும் அவருடைய தத்துவ ஞானமும் பாமர மக்கள் மனத்தையும் கவர்ந்தன. அவருடைய்

5. இவர் அந்தகக் கவி வீரராகவ முதலியாரின் மகன் வழிப்பேர்சி. செங்கற்பட்டுக்கு அருகில் உள்ள பொன்விளைந்த களத்துாரில் பிறந்தவர்.

6. திருவேங். கலம்-24.