பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேங்கடம் மேவிய விளக்கு 5.

நமக்குத் திருவருள்பாலிக்கும் பெருமை பேசப்பெறு கின்றது.

‘திருமா லிருஞ்சோலை

மலைஎன்றேன்; என்னத் திருமால் வந்து என்

கெஞ்சுநிறையப் புகுந்தான்’

என்ற திருவாய்மொழி இதற்குச் சான்றாக நிற்கின்றது.

இயற்கை எழில் நிறைந்த திருவேங்கடத்தை ஆழ்வார் பெருமக்கள் தம்முடைய பாசுரங்களில் சிறப்பித்துப் பாடி யுள்ளனர். இவை யாவும் கல் நெஞ்சத்தையும் கரையச் செய்யும் இன்பப் பாசுரங்கள் : கவி நயமும் இசையேற்ற மும் பொருட் செறிவும் பொருந்திப் பொலிபவை. இறை வனிடம் அன்பு கொண்டு ஈடுபட்டு நெஞ்சம் நெக்குருகிப் பாடுபவன் சாதாரண மனிதனாக இருப்பினும் அவன் பாட்டு எவர் உள்ளத்தையும் எளிதில் கவரும். ஆனால் பரம்பொருளின் பேரருளை நிறைவாகப் பெற வேண்டு மென்று பேரவாக்கொண்டு மனம் உருகி நெஞ்சம் கசிந்து பாடும் பக்தர்கள் இசைக் கவிஞர்களாக இருப்பின், அவர் களின் தோத்திரப் பாக்கள் எவ்வளவு உயர் சிறப்டை உடையனவாயிருக்கும்!

திருவேங்கடமலை திருவரங்கத்தைக் காட்டிலும் முதலாழ்வாரின் உள்ளத்தைக் கவர்ந்தது. பொய்கை யாழ்வார்,

“வினைச்சுடரை கந்துவிக்கும்

வேங்கடமே வானோர் மனச்சுடரைத் தூண்டும்

மலை'சி

(நந்துவிக்கும் - உருத்தெரியாமல் நசிப்பிக்கும்)

8. திருவாய், 19, 8 : 1. 9. முதல் திருவுந்-26