பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 வடநாட்டுத் திருப்பதிகள்

என்று கூறித் தம் உள்ளத்தை அதில் ஈடுபடுத்துவர். மன மாகிய சுடரை இதயம் என்னும் விளக்கைத் துரண்டி ஒளிரச் செய்யும் மலை என்று சொல்லும்பொழுதே இவரது உள்ளத்தில் சுடர் விட்டெரியும் பக்தி விளக்கு நமக்கு ஓரளவு புலனாகின்றது. மண்ணவர்க்கு மட்டு மன்று விண்ணவர்க்கும் மனச் சுடரைத் தூண்டுகின்றது இம்மலை என்கின்றார் ஆழ்வார். பக்தி என்ற ஒரு நெருப்பை மூட்டி மற்றொரு நெருப்பை அணைக்கின்றது திருவேங்கடம் என்று சமத்காரமாகக் கூறும் கவிதையில் பக்திச் சுடர் கவின் பெறுகின்றது. பேயாழ்வாரோ பரம பதத்தோடும் பாற்கடலோடும் இம்மலையைச் சேர்த்துப் பேசுகின்றார்.

பண்டுளல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுக்தம்

கெண்டு.அங்கு உற்ைவார்க்குக்

estradecuar, oio

என்பது அவரது திருவாக்கு.

சேரர்கோன் குலசேகரப் பெருமாளுக்குத் திருவேங்கட மலையின்மீது ஏற்பட்ட கழிபெருங் காதல் அற்புத மானது. ஒர் இனிய திருமொழியில் அந்த ஆழ்வாரின் எண்ணக் கோவைகளைக் கண்டு களிக்கலாம். திருவேங் கடத்தில் பிறத்ததும் அங்கு ஏதாவது ஒரு பொருளாக இருத்தலும் போதும் என்று கூறுகின்றார் இந்த ஆழ்வார். திருவேங்கட மலையில் வாழும் பேறு கிடைக்கப் பெற்றால் அறிவற்ற விலங்குப் பிறவியும் தமக்குப் போதும் என்கின்றார். கோனேரியில் வாழும் குருகு, திருவேங்கடக சுனைமீன், வேங்கடக்கோன் உமிழும் பொன் வட்டில், செண்பக மரம், புதர், பொற்குவடு,

19. மூள். திருவத்-51

11. துே. தி.கு: