பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேங்கடம் மேவிய விளக்கு 7

மலையில் பாயும் கானாறு, காட்டு நெறி, கருவறைப்படி என்ற நிலை தமக்கு அமையின் போதும் என்று ஒன்றொன்றாகப் பிரித்துக் கூறுகின்றார். இறுதியாக ‘எம்பெருமான் திருமலையில் ஏதேனும் ஆவேனே என்று சொல்லித் தம் ஆசைக்குத் தலைக்கட்டி விடுகின்றார். இந்தத் திருமொழியை அடியொற்றியே முத்தமிழ்க்கவி வீரராகவ முதலியார்,

‘மாடாக நிழற்றுசெழு

மானாகத் தவச்சிறிய பூடாக குழைத்தாறும்

புதலாக வழிப்படுவார் ஒடாகப் பெறுவமெனில்

உயிர்காணற் கதிபெறலாம் வீடாகத் திருநெடுமால்

வீற்றிருக்கும் வேங்கடத்தே’ (மாடு - விலங்கு, நிழற்றும் - நிழல் தரும்; தவச்சிறிய

மிகச்சிறிய, பூடு - புல் பூண்டு; புதல்-புதர்’ என்ற பாடலை அருமையாக அமைத்து ஆழ்வாரிடமும் அவர் மூலம் திருமலையின்மீதும் தமக்குரிய ஈடுபாட் டைப் புலப்படுத்துகின்றார்.

திருமலையின் இயற்கைக் காட்சிகள். எங்கெல்லாம். அழகு உள்ளதோ அங்கெல்லாம் இறை வ னும் இருப்பதாகக் கொள்வது தமிழரது கொள்கை. இக்கொள்கையே முருகன்’ என்ற தமிழ்க் கடவுளின் தத்துவம் என்பதைத் திரு. வி. க. போன்ற இறையன்பு கொண்ட அறிஞர்கள் விளக்கிப் போந்துள்ளனர். இக் கொள்கையை ஒட்டியே பக்தர்களும் இயற்கையில் தோய்ந்து இறைவனை அநுபவிக்கின்றனர். காட்டிலும் , நாட்டிலும், மண்ணிலும், விண்ணிலும் எல்லா இடங். களிலும் காணும் இயற்கையழகுகளில் எம்பெருமானின்

12. திருவேங், கலம்-72