பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேங்கடம் மேவிய விளக்கு 15,

பவித்த’ எண்ணற்ற பாவங்களைச் செய்தேன். பல உயிர்களைக் கொன்று பலவகைப் பாவங்களைப் பண்ணினேன்.” எண்ணற்ற யோனிகளில் பிறந்து இளைத்தேன்; ஒருவிதமான நற்செயல்களையும் புரிந்தேன் இலேன். பஞ்ச பூதங்களாலான யாக்கையில் புகுந்து புலம்பித் தளர்ந்தொழிந்தேன். அறியாப் பருவத்தே பல அவச் செயல்களை செய்துவிட்டேன். இளமைப் பருவத்தில் பெண்டிற்காகவே அலைந்து சதிர்கேட. னானேன். இங்ஙனம் பாவமே செய்து பாவியான அடியேன் உன்னை விட்டுத் தரிக்கமாட்டாத அன்பு பிற த் து உன்னையே அடைக்கலமாகப் பற்றிக் கொண்டேன். முன்னைத் தீவினைகளை எண்ணி என்னைக் கைவிடாது ஆட்கொள்ளவேண்டும் என்று. கூறி’ அவனைச் சரணமடைகின்றார் ஆழ்வார்.

ஆழ்வார்களுள் தலைவராகக் கருதப்பெறும் நம்மாழ். வாரின் அருளிச் செயல்களில் திருவேங்கடத்தைப் பற்றி வரும் செய்திகள் மிக அற்புதமானவை. விசிட்டாத்வைத தத்துவத்தின் உயிர் நாடியாகவுள்ள சரணாகதியின் அருமையை உலகுக்கு உணர்த்தும் பெருமையை இங்குக் காணலாம். திருமலையில் எழுந்தருளியிருக்கும் எம் பெருமான் இந்த ஆழ்வாருக்குத் தாள் பரப்பி மண் தாவிய ஈசனாகவும், என் கண், பாசம் வைத்த பரஞ்சுட'ராகவும்.” வேதியர் முழுவேதத்து அமுத’ மாகவும், * காட்சி அளித்து அவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றான். இத்தகைய எம்பெரு மானின் திருவடியில்,

SAASAASAASAASAASAASAASAASAASAAAS

85. பெரி. திரு-1, 9:2 40. பெரி. திரு.1.9:9 :36. . 1. 9:3 41. திருவாய் 3.3:11. 37. பெரி. திரு-1.9:4, 5 :42. . 8.8:4 88. . 1. 9, 6 48. . 8.3:5

89. . 1.9: