பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வடநாட்டுத் திருப்பதிகள்

‘அகல கில்லேன் இறையும்’ என்று

அலர்மேல் மங்கை உறைமார்பா நிகரில் புகழாய் உலகம்மூன்று

உடையாய் என்னை ஆள்வோனே! நிகரில் அமரர் முனிக்கணங்கள்

விரும்பும் திருவேங் கடத்தானே! புகல் ஒன்று இல்லா அடியேன்உன்

அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.”*

(இறை-கணநேரம் நிகர்-ஒப்பு; புகல் ஒன்று

வேறு வழி)

என்று சரண்புகுகின்றார். சேததன் ஈசுவரனைப் பற்று வதற்கு அவனுடைய திருக்குணங்களுள் வாத்சல்யம், சுவாமித்துவம், செளசீல்யம், செளலப்பியம் ஆகிய நான்கும் துணை செய்யக் கூடியவை. திகரில் புகழாய்’ என்பதால் வாத்சல்யத்தையும், உலகம் மூன்றுடையாய்’ என்பதால் சுவாமித்துவத்தையும், ‘என்னை ஆள்வானே என்பதால் செள சீல்யத்தையும், திருவேங்கடத்தானே’ என்பதால் செளலப்பியத்தையும் தெரிவிக்கின்றார் ஆழ் வார். புகழ் ஒன்று இல்லா அடியேன்” என்பதால், பிரபத் திற்கு அதிகாரமான ஆகிஞ்சந்யம் (கைமுதல் இல்லாமைநம்காரியத்திற்கு நாம் கடவோம் அல்லோம் என்றி ருக்கை), அநந்யகதித்வம் (வேறு புகல் இல்லாமைஇறைவன் ஒருவனே காப்பாற்றுபவன் என்றிருக்கை) ஆகியவற்றைத் தெரிவித்தபடி, அலர்மேல் மங்கை’ என்பதால் புருஷகாரம் (சேர்ப்பிக்கும் தன்மை) போதரு கின்றது. இந்தப் பாசுரம் வைணவர்கட்கு சரம சுலோ கம்’ போல் இனிப்பது; அதுபோல் ஆன்மாவை ஈடேற் றும் புணைபோல் இருப்பது. இதுதான் எம்பெருமானைக் ‘கால்கை பிடித்து (காக்கை பிடித்து?) உய்யும் வழியாக இருப்பது. வைணவ தத்துவ மொழியில் கூறினால்

44. திருவாய் 6.10:19 45. கீதை 18:66