பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேங்கடம் மேவிய விளக்கு 17

  • சரணாகதியாக’ இரு ப் ப.து. இப்பாசுரத்திற்கும் இப்பாசுரம் அடங்கிய பதிகத்திற்கும் ஈட்டாசிரியர் கூறும் சொற்பொருள்கள் சிந்தைக்கும் செவிக்கும் இனிப்பவையாகும். இத் திருவாய்மொழியின் ஒன்பதாம் பாசுரத்தின் இறுதியடி அந்தோ அடியேன் உன்பாதம் அகலகில்லேன் இறையுமே” என்பது. ஆழ்வார் பாசுரங். கட்கு உரை சொல்லும்போதே வைணவ தத்துவம் அனைத்தையும் குழைத்துத் தந்துவிடுவார்கள்-அன்னை பிள்ளைக்கு முலைப்பாலுடன் மருந்தைக் குழைத்துத் தருவதைப்போல. அன்னை உடலுக்கு மருந்து ஊட்டு கின்றாள்; ஆசாரியர்கள் உயிருக்கு மருத்து ஊட்டு கின்றனர். அவ்வளவுதான். இப்பாசுரம் சரணா கதியைக் குறிப்பதால் இத்திருவாய்மொழி முழுவதும் ச ர ன க தி சாரமாயிருக்கும் என்று வைணவ ஆசாரியர்கள். திருவுள்ளம் பற்றுவார்கள். அதற்கேற்ப இந்த ஆறாம் பத்து முழுவதிலும் உலகளந்த திருவடி அடிக்கடி கூறப்பெறுவதையும் காணலாம். நெடியோன் என்ற பெயர் திரிவிக்கிரமனைக் குறிப்பது, மூன்று ஆச்சரியமான செயல்களைச் செய்தவன் திரிவிக்கிரமன் இத் திருப்பாசுரத்தைத் துவய மந்திரத்தின் பதங்களோடு ஒப்பிட்டுப் பொருள் கூறுவர் ஈட்டாசிரியர்.

ஏழுமலையில் எழுத்தருளியிருக்கும் எம்பெருமானிடம் பொலியும் திருக்குணத்தை ஆசாரிய ஹிருதயம், !

“மண்ணோர் விண்ணோர் வைப்பில், போகின்ற ஏழுலகுக்கும் உயிர்பாசம் வைத்த நிகரில் வாத்சல்யம் உஜ்வலம்’ 1வைப்பு-திருமலை, வாத்சல்யம்-கன்றினிடத்தில் t  ;

AASAASAASAAAS

46. திருவாய் - 6, 10:9 47. ஆசா. ஹிரு -151 (புருடோத்தமநாயுடு பதிப்பு)

33--